close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் கமலின் வயது: ஒரு ஆச்சரியமான தகவல்

Friday, October 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமலஹாசன் நடித்த ’இந்தியன்’ திரைப்படம் கடந்த 1996ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ என்ற திரைப்படம் உருவாகி வருகிறது

இந்தியன் படத்தில் கமல்ஹாசன் சேனாதிபதி என்ற 70 வயது கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 23 வருடம் ஆகி விட்ட நிலையில் அதனை கணக்கில் கொண்டு ’இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசனின் 93 வயது முதியவர் கேரக்டரில் நடித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது

90 வயதுக்கும் மேற்பட்ட கதாபாத்திரத்தில் பல நடிகர்கள் இதுவரை இந்திய சினிமாவில் நடித்திருந்தாலும் ஒரு ஆக்ஷன் படத்தின் ஹீரோவாக 93 வயது முதியவராக ஒரு நடிகர் நடிப்பது அனேகமாக இந்திய சினிமாவில் இதுதான் முதல் முறையாக இருக்கும் என கருதப்படுகிறது

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது போபால் நகரில் சுமார் 2,000 துணை நடிகர்களுடன் நடைபெற்றுவருகிறது. இந்த படப்பிடிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சியில் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. கமல்ஹாசன், காஜல்அகர்வால், ரகுல் பிரீத்திசிங், பிரியா பவானிசங்கர், சித்தார்த், பாபி சிம்ஹா, விவேக், வித்யூத் ஜம்வால், சமுத்திரகனி, டெல்லி கணேஷ், உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.