close
Choose your channels

'டாக்டர்' படத்தில் ஒளிந்திருக்கும் 11.03 ரகசியம் என்ன தெரியுமா?

Tuesday, February 18, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிப்பில் 'இன்று நேற்று நாளை' இயக்குனர் ரவிகுமாரின் இயக்கத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிவரும் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நேற்று காலை 11.03 மணிக்கு வெளிவந்தது என்பது தெரிந்ததே. இந்த போஸ்டருக்கு சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்தனர்.

இந்த நிலையில் இதற்கு முன்னர் வெளியான ’டாக்டர்’ படத்தின் அறிவிப்பு, டைட்டில் லுக், மற்றும் முதல் போஸ்டர் ஆகியவையும் 11.03 மணிக்கு தான் வெளிவந்தது என்பதும், நேற்றும் 11.03 மணிக்கு இந்த ஃபர்ஸ்ட்லுக் வெளிவந்ததற்கும் ஏதோ ஒரு ரகசியம் ஒளிந்திருப்பதாக சிவகார்த்திகேயன் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த படத்தின் அனைத்து புரமோஷன்களும் 11.03க்கு வருவதற்கும் இந்த படத்தின் கதைக்கும் ஒரு முக்கிய சம்பந்தம் இருப்பதாகவும் இதுகுறித்து விரைவில் படக்குழுவினர் அறிவிக்கவிருப்பதாகவும் தெரிகிறது. அது என்ன ரகசியம் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரித்திசிங், ஷரத் கெல்கர் இஷா கோபிகர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். விஜய் கார்த்திக்கண்ணன் ஒளிப்பதிவில் நிர்மல படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.