ஆக்சிஜன் தட்டுப்பாட்டில் மத்திய அரசு செய்த காரியம்...! அதிருப்தி அடைந்த தமிழக அரசு...!

  • IndiaGlitz, [Wednesday,April 21 2021]

தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை, தமிழக அரசின் உத்தரவு இல்லாமலே, மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு இதை அனுப்பிவருகிறது. இதுபற்றி மாநில அரசு கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அரசுடன் இதுபற்றி கலந்து ஆலோசனை செய்யவில்லை என்றும் மத்திய அரசு குறித்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனாவின் 2-ஆம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. தினசரி பாதிப்புகளும், கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்து தான் வருகிறது. படுக்கை வசதிகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு மற்றும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சனைகள் மருத்துவமனைகளில் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், பிற நாட்களில் இரவு நேர ஊரடங்கும் கடுமையாக பின்பற்றப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி செய்யக்கூடிய 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை, தமிழக அரசின் அனுமதி இல்லாமலே, மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில், மத்திய அரசு கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

சென்னை, ஸ்ரீபெரும்புத்தூரில் உற்பத்தி செய்யப்பட்ட 45 மெட்ரிக்டன் ஆக்சிஜனை தான், மத்திய அரசு ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு அனுப்பியுள்ளது. தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத போதிலும், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை, தெலுங்கானாவை ஒப்பிடும் போது,
நம் மாநிலத்தில் அதிகம் தான். மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மத்திய அரசு செய்தது, தமிழக அரசிற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் உரையாடிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருப்பதாவது,
இங்கிருந்து ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு அனுப்பும் யோசனை குறித்து, மத்திய அரசு தமிழக அரசிடம் விவாதிக்கவில்லை. தேவைக்கு அதிகமாக இருக்கும் பட்சத்தில், பிற மாநிலங்களுக்கு உதவ தயாராகத்தான் உள்ளது தமிழக அரசு. அதே சமயத்தில் நம் மாநிலத்தில் கொரோனா வேகமாக பரவி வருவதையும், நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் முறையிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

More News

இதுதான் வாழ்க்கை? பிரபல பாலிவுட் நடிகை கூறிய கருத்தால் வைரலான பதிவு!

தென்னிந்திய சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று முன்னணி நடிகையாக மாறி பின்னர் ஹாலிவுட்டிலும் முத்திரைப் பதித்தவர் நடிகை தீபிகா படுகோன்.

வாயுக்கசிவால் சிகிச்சை பெற்றுவந்த 22 நோயாளிகள் உயிரிழப்பு… ம.பி. யில் நடந்த சோகம்!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் செயல்பட்டு வந்த ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிவு ஏற்பட்டு 22 நோயாளிகள் உயிரிழந்து உள்ளனர்.

கர்ப்பமாக இருந்தபோது தற்கொலைக்கு முயன்ற பிரபல நடிகை: அதிர்ச்சி தகவல்

கர்ப்பமாக இருக்கும் போது தற்கொலைக்கு முயன்றதாக பிரபல நடிகை ஒருவர் பேட்டி அளித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கில், காவல் அதிகாரிக்கு சிறைதண்டனை...!

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் என்பவரை காவல் அதிகாரிகள் கொலை செய்ததை தொடர்ந்து, இவ்வழக்கின் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸிடம் சண்டைபோடும் பாலிவுட் நடிகை… வைரல் பதிவு!

கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு பரவத் துவங்கியபோது எப்படி  மக்களைப் பீதியில் வைத்து இருந்ததோ அதேபோல தற்போது இரண்டாவது அலையிலும் மக்கள் மத்தியில் கடும் சலிப்பை உண்டாக்கி இருக்கிறது.