close
Choose your channels

விஜய் படப்பிடிப்பில் அஜித் எண்ட்ரி ஆனதும் நடந்த அதிசயம்

Saturday, October 19, 2019 • தமிழ் Comments

விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் விஜய்க்கு நண்பர்களாக நடித்த ஜிமிக்கி, மணலி பிரபு, எஸ்தர் பிரபு ஆகியோர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவம் குறித்து பல விஷயங்களை தெரிவித்தனர்.

அப்போது, ‘வேட்டைக்காரன்’ படப்பிடிப்பின்போது நடந்த அதிசய சம்பவம் ஒன்றை அவர்கள் நினைவு கூர்ந்தனர். ‘வேட்டைக்காரன்’ படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டுடியோவில் நடந்தபோது வேறொரு படப்பிடிப்பிற்காக கேரவனில் இருந்து அஜித் இறங்கியதாகவும், அங்கு விஜய் இருப்பதை அறிந்ததும் அவர் உடனே விஜய்யை பார்க்க நேராக சென்றதாவும், அஜித்தை எதிர்பாராமல் பார்த்த விஜய், உடனே அஜித்தை கட்டிப்பிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் கூறினர்.

விஜய்யும், அஜித்தும் உண்மையில் நெருக்கமான நட்பில் இருக்கும்போது எதற்காக வெளியே ‘தல’ தளபதி என தினந்தோறும் மோதிக்கொள்கின்றனர் என்பது தங்களுக்கு புரியவில்லை என்றும் இருதரப்பு ரசிகர்களும் ஒற்றுமையாக இருந்தால் தல, தளபதி ஆகிய இருவரின் படங்களும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Get Breaking News Alerts From IndiaGlitz