விஜயகாந்த் செய்த விஷயம்...!மகிழ்ச்சியின் உச்சத்தில் தேமுதிக வேட்பாளர்கள்...!

  • IndiaGlitz, [Saturday,April 17 2021]

வேட்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க விஜயகாந்த், அந்த விஷயத்திற்கு சரி என்று சொல்லியுள்ளதால் அவர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிகத்தீவிரமாக நடந்துமுடிந்த நிலையில், முடிவிற்காக கட்சிகள் ஆர்வமாக காத்துக்கொண்டிருக்கின்றன. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக அணி இம்முறை அதிமுக-வுடன் கூட்டணி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தினகரனின் அமமுக கட்சியுடன் இணைந்து புது டுவிஸ்டை தந்தது. 59 தொகுதிகளில் அமமுக-வுடன் கைகோர்த்து களம் கண்டது தேமுதிக. இக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைப்பாடு காரணமாக, தேர்தலில் போட்டியிடவில்லை, பிரச்சாரங்களுக்கும் செல்லவில்லை.

இந்த காரணங்களால் விஜயகாந்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதா கட்சிப்பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். இவரது மகன் விஜய பிரபாகரனும், தம்பி சுதீஷ்-ம் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். சுதீஷ்-க்கு கொரோனா தொற்று ஏற்பட அவரும் களப்பணியில் இருந்து ஓய்விலே இருந்தார். இதனால் தேமுதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு பிரபாகரன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்தநிலையில் தேமுதிக வேட்பாளர்கள் கட்சி தலைமையிடம், தேர்தல் பணிகளுக்காக செலவிட்ட பணத்தை கணக்கிட்டு தருமாறு கேட்டிருந்தனர். இதை அறிந்துகொண்ட விஜயகாந்த், கட்சி தலைமை நிர்வாகிகளிடம் பணத்தை கணக்கிட்டு வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இதனால் தேர்தலில் வேட்பாளர்கள் செலவிட்ட பணத்தை நேற்று கட்சி தலைமையிடம் இருந்து பெற்றுக்கொண்டுள்ளனர். தன்னால் யாரும் எதையும் இழக்க வேண்டாம், என விஜயகாந்த் கூறியதாக வேட்பாளர்கள் சார்பாக கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிவை பார்த்துவிட்டு பிற கட்சிகளுக்கு செல்லலாம், என நினைத்திருந்தோம். ஆனால் தலைவர் இப்படி செய்தது எங்களை கட்டிப்போட வைத்துவிட்டது என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

More News

30 லட்சத்தைத் தாண்டிய கொரோனா உயிரிழப்பு… அதிர்ச்சி ரிப்போர்ட்!

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் உருவான கொரோனா வைரஸ் பின்னர் உலகம் முழுவதும் பெருந்தொற்றாக மாறி தற்போது உலகையே ஸ்தம்பிக்க வைத்து உள்ளது.

மரக்கன்று நட்டு நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய பழங்குடி மக்கள்!

மாரடைப்புக் காரணமாக நகைச்சுவை நடிகர் விவேக் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

ஆக்சிஜனை சுவாசிக்கக்‌ கொடுத்தவர்‌ இன்று மூச்சற்றுவிட்டார்: சிம்பு இரங்கல் செய்தி‌ 

சின்ன கலைவாணர் விவேக் இன்று காலமான நிலையில் அவருக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர் என்பதும், இரங்கல் தெரிவித்தனர் என்பதையும் பார்த்தோம்.

சத்யஜோதி தயாரிக்கும் படத்தை இயக்கவிருந்தாரா விவேக்? புதிய தகவல்

பிரபல காமெடி நடிகரான விவேக் ஆரம்பகாலத்தில் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு திரைக்கதை எழுதுவதில் உதவியாளராக இருந்ததாக செய்திகள் வெளியானது

இறுதிவரை நிறைவேறாமலே போய்விட்டது: விவேக் குறித்து விக்னேஷ் சிவன் டுவிட்

தமிழ் திரை உலகின் சின்ன கலைவாணர் என்று செல்லமாக அழைக்கப்பட்ட விவேக் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பு காரணமாக காலமானார்.