திருமணமாகாத ஆணும், பெண்ணும் ஒரே அறையில் தங்கினால் குற்றமா? சென்னை ஐகோர்ட் கருத்து

கோவையை சேர்ந்த தனியார் விடுதி ஒன்றில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரு அறையில் தங்கி இருந்ததாக குற்றம் சாட்டி வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.

இதனை அடுத்து இந்த விடுதியின் நிர்வாகம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் இன்று இது குறித்து கருத்து கூறிய சென்னை ஐகோர்ட், ‘ஒரு திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என்று சட்டம் எதுவும் இல்லை என்றும், எனவே திருமணமாகாத இருவரும் அறையில் தங்குவதில் என்ன தவறு இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியது
மேலும் லிவிங் டுகெதர் என்ற முறையில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது குற்றமில்லை என்று சட்டம் சொல்வது போல் ஒரே விடுதியில் திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்குவது குற்றமாகாது என்று தெளிவுபடுத்தியது.

இதனையடுத்து இந்த காரணத்திற்காக விடுதியை மூடியது சட்ட விதிமீறல் என்றும் உடனடியாக விடுதிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட்டின் இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

காவலன் செயலி மூலம் தமிழகத்தில் 2 பேர் கைது..!

பெண்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை மிகுந்த அக்கறையுடன் பல காரியங்களைச் செய்து வருகிறது அதில் விழிப்புணர்வூட்டும் காவலன் செயலி ஒன்று. அதன் செயல்பாடு பரவலாக்கப்பட்ட

இந்த நாளை குறித்து வைத்து கொள்ளுங்கள்: என்கவுண்டர் குறித்து நடிகை நயன்தாரா பரபரப்பு கருத்து

ஹைதராபாத்தில் பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக் கொலை செய்த நால்வரை நேற்று தெலுங்கானா போலீசார் என்கவுன்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இணையத்தில் வைரலாகும் தமிழ் நடிகையின் கவர்ச்சி நடன வீடியோ

சிவகார்த்திகேயன் நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' என்ற படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்த படத்திற்கு பின்னர் 'தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்

ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ.85 லட்சம்..!

அமெரிக்காவில் ஒரு வாழைப்பழம் ரூ85 லட்சத்தற்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் சம்பத்தில் நடந்துள்ளது.

கார்த்திக் சுப்புராஜின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

விஜய் சேதுபதி நடித்த பீட்சா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதன்பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்க்குரி