ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கிரிக்கெட் பயிற்சி தரும் ஆஸ்திரேலியா வீரர்

  • IndiaGlitz, [Thursday,May 24 2018]

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்காமராஜ் இயக்கி வரும் 'கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அவரது தந்தையாக சத்யராஜ் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கு முன்னாள் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவ் வாட்மோர் அவர்கள் பயிற்சி அளித்து வருவதாகவும், அவரிடம் கற்று கொண்ட கிரிக்கெட் தொடர்பான நுணுக்கங்களை ஐஸ்வர்யா இந்த படத்தில் பயன்படுத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் இந்த படத்தின் கிரிக்கெட் போட்டி காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் என்றும், இந்த படம் ஐஸ்வர்யாவுக்கு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், இளவரசு, ரமா, முனீஸ்காந்த், அறிமுக நடிகர் தர்ஷன் ஆகியோர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி எல் ரூபன் எடிட்டிங்கில், லால்குடி இளையராஜா கலை இயக்குனராக பணியாற்றுகிறார். பல்லவி சிங் ஆடைகளை வடிவமைக்க, போஸ்டர்களை வடிவமைக்கிறார் வின்சி ராஜ். இந்த படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

தூத்துகுடி பதட்டம் எதிரொலி: 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம்

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திடீரென வன்முறை ஏற்பட்டதால் காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்

ஓய்வு முடிவை திடீரென அறிவித்த பிரபல கிரிக்கெட் வீரர்

தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீர்ரும், பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனுமான டிவில்லியர்ஸ் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மூச்சுக்காற்றுக்காக போராடிய மக்களின் மூச்சை நிறுத்துவதா? கார்த்தி ஆவேசம்

தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கை குறித்து பார்த்தோம். சூர்யாவின் சகோதரரும் பிரபல நடிகருமான கார்த்தி இந்த சம்பவம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து கருத்து தெரிவித்த தமிழ் நடிகை கைது?

தூத்துக்குடியில் நேற்றும் இன்றும் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 12 பேர் வரை கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமான தமிழக காவல்துறையை கோலிவுட் திரையுலகினர் பலர் கண்டித்துள்ளனர்.

கமல் மீது வழக்கா? காட்டமான விஷால்

தூத்துகுடியில் நேற்று நடைபெற்ற காவல்துறையினர்களின் துப்பாக்கி சூடு காரணமாக 11 அப்பாவி பொதுமக்கள் மரணம் அடைந்தனர். அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கவும்,