விஜய்-மகேஷ்பாபு நடிப்பில் 'பொன்னியின் செல்வன்'. மணிரத்னம் திட்டம்

  • IndiaGlitz, [Thursday,April 13 2017]

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் 'ஸ்பைடர்' என்பதை நேற்று பார்த்தோம். மகேஷ்பாபுவின் முதல் நேரடி தமிழ்ப்படமான இந்த படம் மகேஷ்பாபுவுக்கு ஏராளமான தமிழ் ரசிகர்களை சம்பாதித்து கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ்பாபு அளித்த பேட்டி ஒன்றில் தான் சென்னையை சேர்ந்தவர் என்றும் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு தனக்கு சென்னையில் தான் அமைந்தது என்றும் குறிப்பிட்டார்

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்க முயற்சி செய்தபோது 'என்னையும் விஜய்யையும் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஆனால் ஒருசில காரணங்களால் அந்த படம் தொடங்க முடியாமல் போய்விட்டதாகவும் கூறினார்.

தற்போது 'பாகுபலி' உள்பட ஒருசில சரித்திர படங்கள் ஹிட் ஆகிவருவதால் விரைவில் மணிரத்னம் 'பொன்னியின் செல்வன்' படத்தை தொடங்க வேண்டும் என்று விஜய் மற்றும் மகேஷ்பாபு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

More News

அஸ்வின் இந்தியர், விவசாயிகள் மட்டும் தமிழர்களா? நிருபரை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி

நகைச்சுவை நடிகர் ஆர்ஜே பாலாஜி நடிகராக மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஜெயலலிதா மரணத்திற்கு முந்திய நாள் நடந்தது என்ன? மனோபாலா திடுக்கிடும் தகவல்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா டிசம்பர் 5ஆம் தேதி மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டாலும், அவர் இறந்த தேதி எது? என்பது குறித்து சர்ச்சைக்குரிய சந்தேகங்களை அவ்வப்போது பலர் எழுப்பி வருகின்றனர்.

'விஜய் 62' படத்திலும் 3 நாயகிகளா?

அட்லி இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடித்து வரும் 'விஜய் 61' படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யாமேனன் என மூன்று நாயகிகள் நடித்து வருவது தெரிந்ததே.

பெட்ரோல்-டீசல்: மே 1 முதல் தினசரி விலைமாற்றம்

இந்தியாவில் தற்போது பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை கச்சா எண்ணெயின் சர்வதேச விலைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

26 வருடங்களுக்கு பின் ராஜ்கிரணுடன் மீண்டும் மோதும் பி.வாசு

பிரபல இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த 'சிவலிங்கா' திரைப்படம் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது.