கேப்டன் விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது எப்போது? பிரேமலதா தகவல்..!

  • IndiaGlitz, [Sunday,April 28 2024]

சமீபத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்குவதாக அறிவித்த நிலையில் கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் விழாவில் விஜயகாந்த் பெயர் இடம் பெறவில்லை என்பது பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்துக்கு எப்போது பத்மபூஷன் விருது வழங்கப்படும் என்பது குறித்த தகவலை அவரது மனைவியும் தேமுதிக செயலாளருமான பிரேமலதா இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறிய போது ’டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து எங்களுக்கு வந்த தகவல்படி கேப்டன் விஜயகாந்த்துக்கு வரும் மே 9ஆம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளது.

இதனை அடுத்து நானும் எனது மகன் விஜய பிரபாகரனும் டெல்லிக்கு மே 8ஆம் தேதி செல்கிறோம். மே 9ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜயகாந்த் பத்ம பூஷன் விருது வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவித்தார்.

கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜயகாந்த் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், 9ஆம் தேதி வழங்கப்படவுள்ளதால் விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தேமுதிக தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

More News

அனைவரும் எதிர்பார்த்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்.. தியேட்டரில் இல்லாத ஒரு இன்ப அதிர்ச்சி..!

மலையாள திரைப்படமான 'மஞ்சும்மெல் பாய்ஸ்' என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும் 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 236 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்தது

அஜித்தின் அடுத்த படத்தில் இரண்டு 90s ஹீரோயின்கள்? இருவரும் அஜித் ஜோடியாக நடித்தவர்கள்..!

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் பிரபலமாக இருந்த இரண்டு நடிகைகள் அஜித் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அனிருத் இசையமைக்கும் படத்தில் பாடல்களே இல்லையா? பிரபல ஹீரோ படத்தின் முக்கிய தகவல்..!

ஒரு திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்றால் அதில் ஆட்டம் போட வைக்கும் பாடல்கள் உண்டு என்பதுதான் அனைவரும் எதிர்பார்த்து அந்த படத்திற்கு செல்வதுண்டு. ஆனால் அனிருத்

இன்று முதல் சன் டிவி பாருங்கள்.. 'குக் வித் கோமாளி'யை மிஸ் செய்த வெங்கடேஷ் பட் அறிவிப்பு..!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஐந்தாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் கடந்த நான்கு சீசன்களில் நடுவராக கலந்து கொண்ட வெங்கடேஷ் பட் இந்த நிகழ்ச்சியில் இல்லை என்பதும்

அப்பாங்க எல்லாம் அப்படித்தான்.. புரிஞ்சிக்கவே மாட்டாங்க.. சமுத்திரக்கனியின் 'ராமம் ராகவம்' டீசர்..!

சமுத்திரகனி நடித்த 'ராமன் ராகவம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.