close
Choose your channels

ரஜினி கட்சி தொடங்குவது எப்போது? தமிழருவி மணியன் பதில்

Saturday, May 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 23ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நிலையில், 22 சட்டமன்ற இடைத்தேர்தலின் முடிவை பொறுத்தே, அதிமுக ஆட்சி நீடிக்குமா? அல்லது பொதுதேர்தலின்மூலம் புதிய ஆட்சி அமையுமா? என்பது தெரியவரும். ஒருவேளை சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும் சூழல் ஏற்பட்டால் ரஜினியின் கட்சி அறிவிப்பு உடனே வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பேட்டி அளித்த ரஜினியின் ஆதரவாளரான தமிழருவி மணியன், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி என்று முடிவுக்கு வருகிறதோ அதற்கு அடுத்த நாளே ரஜினிகாந்த் தனது கட்சியை தொடங்குவார் என்று தெரிவித்தார்.

மேலும் அதிமுக, திமுகவுடன் எப்போதும் ரஜினி கூட்டணி வைக்கமாட்டார் என்றும், அப்ப்டி ஒருவேளை அதிமுக, திமுகவுடன் கூட்டணி அமைத்து வரவேண்டுமெனில் ரஜினி அரசியலுக்கே வரமாட்டார் என்றும் தெரிவித்தார்.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.