'குக் வித் கோமாளி' போட்டியான 'டாப் குக்கு டூப் குக்கு' எங்கே? ப்ரோமோ கூட வரவில்லை..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் சமீபத்தில் தொடங்கி, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் தொடங்கப்பட்ட ‘டாப் குக்கு டூப் குக்கு’ என்ற நிகழ்ச்சியின் அடுத்த சீசன் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு, கிட்டத்தட்ட இரண்டு நிகழ்ச்சிகளும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பான நிலையில், இந்த ஆண்டு 'குக் வித் கோமாளி' சீசன் 6 தொடங்கி சில வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், ‘டாப் குக்கு டூப் குக்கு’ 2வது சீசன் இன்னும் வரவில்லை என்பதால், ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியை தயாரித்த மீடியா மிஷன் நிறுவனம், இதுகுறித்து கூறியதாவது:
"தற்போது 'நானும் ரவுடிதான்' என்ற நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கிறது. நிச்சயமாக ‘டாப் குக்கு டூப் குக்கு’ சீசன் 2 நிகழ்ச்சி உண்டு, ஆனால் கொஞ்சம் தாமதமாக வரும். எந்த நிகழ்ச்சிக்கும் போட்டியாக நாங்கள் எதையும் செய்யவில்லை. எங்கள் நிகழ்ச்சியை நாங்கள் தரமாக, கடந்த ஆண்டை விட இன்னும் அதிக சுவாரசியத்துடன் கொண்டு வருவோம்." என்றனர்.
எனவே, விரைவில் ‘டாப் குக்கு டூப் குக்கு’ நிகழ்ச்சியின் அறிவிப்பு விரைவில் வெளிவர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments