டிடிவி தினகரன் கைது எப்போது? நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் பதில்

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

இரட்டை இலை சின்னத்தை பெற ரூ.60 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் கடந்த மூன்று நாட்களாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இந்த நிலையில் சற்று முன்னர் தினகரனிடம் நான்காவது நாளாக இன்றும் விசாரணை தொடங்கியது.

இதனிடையே கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சுகேஷ் சந்திராவுக்கும் டிடிவி தினகரனுக்கும் இடையே நடந்த உரையாடலின் தொலைபேசி ஆதாரங்கள் இன்று டெல்லி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அப்போது தினகரனுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றத்தின் கேள்விக்கு பதிலளித்த டெல்லி குற்றப்பிரிவு போலீசார், தினகரனுக்கு எதிரான தங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த ஆதாரங்களை வைத்தே அவரை கைது செய்ய தங்களால் முடியும் என்றும் இருப்பினும் கூடுதல் ஆதாரங்களை சேரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

எனவே தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் டிடிவி தினகரன் வெகுவிரைவில் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

More News

இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தை. ஓபிஎஸ் முக்கிய தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஓபிஎஸ் முதல்வர் பதவியேற்று ஆட்சியை நடத்தி கொண்டிருந்தார்.

ஒரு மணி நேரத்தில் பிடிபட்ட சென்னை சென்ட்ரல் ரயில் வெடிகுண்டு மிரட்டல்காரர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று ஒரு மிரட்டல் கடிதம் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்ததாக சற்று முன்னர் பார்த்தோம்.

ஆபாச படங்கள் நடித்த நடிகைக்கு கிடைத்த கடவுளின் ஆசி!

சிறு வயதில் பக்கத்து வீட்டு நபர் ஒருவரால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான கிறிஸ்சி அவுட்லா என்பவர் சமீப காலம் வரை ஒரு மணி நேரத்துக்கு $1000 சம்பளம் வாங்கும் ஆபாச பட நடிகையாக இருந்தார்.

4 ரயில்களில் குண்டு வெடிக்கும்: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த மிரட்டல் கடிதம்

சட்டீஸ்கர் மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் மூன்று தமிழக வீரர்கள் உள்பட 26 வீரர்கள் பலியான அதிர்ச்சியில் இருந்தே இன்னும் மீள முடியவில்லை.

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழந்தையை வளர்க்கவே சிரம்ப்பட்டு வருகின்றனர்