சனிப்பெயர்ச்சி எப்போது நிகழப்போகிறது- ஜனவரி 24 ? டிசம்பர் 26 ?

  • IndiaGlitz, [Friday,January 24 2020]

 

நமது எதிர்காலத்தைக் குறித்து தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் பலருக்கு சுவாரசியத்தை தருகிறது. மதம் பற்றி நம்பிக்கை இல்லாதவர்கள் கூட எதிர்காலத்தைக் குறித்து தெரிந்து கொள்வதில் எப்போதும் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால் சனிப் பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு பெயர்ச்சி போன்ற பொதுவான கிரகங்களின் பெயர்ச்சிகளின் போது அதன் பலனை தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றனர்.

சனிப்பெயர்ச்சி எப்போது?

திருக்கணிதம் பஞ்சாங்கத்தின்படி 24, ஜனவரி 2020 இல் சனிப்பெயர்ச்சி என்று கணிக்கப் பட்டுள்ளது. ஆனால் வாக்கியப் பஞ்சாங்கம் 26, டிசம்பர் 2020 என்று குறிப்பிடுகிறது. இதனால் எப்போது சனிப்பெயர்ச்சி நிகழப்போகிறது? கோவில்களில் எந்த நாளில் சனிப்பெயர்ச்சி வழிபாடுகள் நடைபெறும் போன்ற கேள்விகள் எழுப்பப் பட்டு வருகின்றன.

நமது ஜோதிட முறைகளில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு பஞ்சாங்கங்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. திருக்கணிதம் என்பது சூரியனை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்ற அறிவியல் முறையிலான கணக்கீடு ஆகும். இது திருத்தப்பட்ட முறையாகக் கருதப்படுகிறது. வாக்கியம் என்பது நமது முன்னோர்களால் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நடைமுறை பழக்கத்தில் பின்பற்றப் பட்டு வருகிற முறையாகும். நமது இந்தியாவில் ஜோதிட முறை வேத காலத்தில் இருந்தே காணப்படுகிறது என்றும் ரிஷிகள்தான் ஜோதிட முறையை உண்டாக்கியதாகவும் நம்பப்படுகிறது.

இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் என்ன வித்தியாசம் என்றால், கிரகங்களின் இடப்பெயர்ச்சியில் ஓரிரு மாதங்கள் இடைவெளி இருக்கும். ஒரு நாளில் சுமார் 6 மணி, 48 நிமிஷங்கள் இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் வித்தியாசம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஒருவரின் ஜாதகத்தைக் கணிக்கும்போது மிகவும் அரிதாக சில நேரங்களில் லக்கினம் மாறி வருவதும் உண்டு. பெரும்பாலும் இரண்டு பஞ்சாங்களுக்கும் ஒரு மாத இடைவெளி மட்டுமே இருக்கின்ற நிலையில் தற்போது சனிப் பெயர்ச்சி ஏறக்குறைய ஒரு வருட கால இடைவெளியுடன் நடைபெற போகிறது.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி கடந்த 19 டிசம்பர் , 2017 சனிப் பெயர்ச்சி நிகழ்ந்தது. அதே போல திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 26 ஜனவரி 2017 நிகழ்ந்தது. பொதுவாக ஒரு ராசியில் இருந்து சனிபகவான் முதல் முறை எப்போது பெயர்ச்சி ஆகிறாரோ அதுவே பெயர்ச்சி கணக்காக எடுத்துக் கொள்ளப் படுகிறது. எனவே சனிப் பெயர்ச்சியைப் பொறுத்த வரையில் இரண்டு பஞ்சாங்கங்களுக்கும் ஒரு வருட கால இடைவெளியுடன் நடைபெறுகிறது.

வட இந்தியாவில் பெரும்பாலும் திருக்கணித பஞ்சாங்க முறைகளுக்கு மாறிவிட்டனர் என்றாலும் தமிழகத்தில் வாக்கியப் பஞ்சாங்கமே கடைபிடிக்கப் பட்டு வருகிறது. மேலும் கோவில்களிலும் வாக்கியப் பஞ்சாங்கத்தின் படியே ஆகம சடங்குகள் நடத்தப் படுகின்றன. ஜோதிட அறிஞர்கள் சனிப்பெயர்ச்சிகளின் நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும்போது யாருக்கு என்ன பஞ்சாங்கம் பிடித்திருக்கிறதோ அதைப் பின்பற்றலாம் எனக் கூறுகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சனிப்பெயர்ச்சி டிசம்பர் 26 இல் தான் கடைபிடிக்கப்படும் என்பதும் குறிப்பிடத் தக்கது.

More News

குட்டித்தளபதியை விரைவில் எதிர்பார்க்கலாம்: விஜய் பெற்றோரை சந்தித்த ரசிகர் பேட்டி

குட்டி தளபதி என்று அழைக்கப்படும் தளபதி விஜய்யின் மகன் சஞ்சயை விரைவில் திரையுலகில் எதிர்பார்க்கலாம் என சமீபத்தில் விஜய்யின் பெற்றோரை சந்தித்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மகேஷ்

ஆளாளுக்கு ஒருவிதமா பேசுறாங்களே! ரஜினி-பெரியார் விவகாரம் குறித்து கஸ்தூரி

பெரியார் குறித்து அவமரியாதையாக நடிகர் ரஜினிகாந்த் பேசியதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் திடீர் திருப்பமாக ஒரு சில அதிமுக அமைச்சர்கள் ரஜினிக்கு

நீண்ட இடைவெளிக்கு பின் திரையில் இணையும் ரஜினி-கமல்: பரபரப்பு தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து கடந்த 1979 ஆம் ஆண்டு வெளிவந்த 'நினைத்தாலே இனிக்கும்' என்ற படத்தில்தான் கடைசியில் நடித்தனர்.

'தலைவர் 168' படத்தின் டைட்டில் இதுவா? கமல் ரசிகர்கள் கொண்டாட்டம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'தலைவர் 168' இந்த படத்தில் மீனா,

நடிகர் சங்க தேர்தல் வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் கடந்த ஜூன் 23ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த தேர்தல் சம்மந்தப்பட்ட வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதால்