close
Choose your channels

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு எப்போது?

Thursday, June 10, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிமுறைகளை நீட்டிக்குமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உயர் அதிகாரிகள் பலரும் பரிந்துரை செய்து வருகின்றனர். அதோடு பாதிப்பு குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் நடைப்பயிற்சி போன்ற சில விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரலாம் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கிறது. இதனால் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஜுன் 7 ஆம் தேதி முதல் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. அதோடு 30 ஆயிரத்தைத் தாண்டிய கொரோனா பாதிப்பு கடந்த இரண்டு நாட்களாக குறைந்து காணப்படுகிறது. இதனால் அடுத்து வரும் ஊரடங்கு விதிமுறைகளில் சில தளர்வுகளை எதிர்ப்பார்க்கலாம் என்றும் பாதிப்பு அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் மேலும் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கூடுதல் தளர்வுகள் வழங்குவது குறித்தும் சென்னை தலைமை செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார். இந்தக் கூட்டத்தில் பேசிய உயர் அதிகாரிகள் பலரும் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு விதிமுறைகளை நீட்டிக்குமாறு பரிந்துரை செய்துள்ளனர். ஆனால் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளைக் கொண்டு வரலாம் எனவும் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனால் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் நடைப்பயிற்சி, டாஸ்மாக் போன்ற விதிமுறைகளில் தளர்வுகள் இருக்கும். மேலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தமிழக முதல்வர் நாளை அறிவிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.