கொரோனா நிவாரண நிதி ரூ,2,000 எப்போது கிடைக்கும்? அமைச்சர் தகவல்!

  • IndiaGlitz, [Saturday,May 08 2021]

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்றால் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்த அறிவிப்பை அடுத்து நேற்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்கள் 5 மக்கள் நலத் திட்டப்பணிகளுக்கான கோப்புகளில் கையெழுத்து இட்டார்.

அதில் ஒவ்வொரு குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் கொரோனா நிவாரண நிதியாக, முதல் தவணையாக ரூ.2,000 வழங்கப்படும் என்பதும் அடங்கி இருந்தது. இதையொட்டி தமிழகம் முழுவதும் கொரோனா நிவாரண நிதி வரும் மே 10 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவித்து உள்ளார்.

இதன் மூலம் 4,153.39 கோடி ரூபாய் செலவில் தமிழகத்தில் உள்ள 2,07,67,000 குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. அதோடு இத்திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டையில் வரும் மே 10 ஆம் தேதி தொடங்கி வைக்க உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.சக்கரபாணி குறிப்பிட்டு உள்ளார்.

அதோடு குடும்ப அட்டைத்தாரர்களுக்கு அதிகாரிகளே நேரடியாக வந்து டோக்கன் வழங்குவார்கள் என்றும் ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்கள் என்ற வீதத்தில் ரேஷன் கடைகள் வழியாக பணம் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

More News

பொறுத்தார் பூமி ஆள்வார்: முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய கே.பாக்யராஜ்

தமிழக முதல்வராக நேற்று பொறுப்பேற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு திரையுலகினர் பலரும் வாழ்த்துக்களை நேரிலும், சமூக வலைத்தளங்களிலும், தொலைபேசியிலும் தெரிவித்தனர்

நடிகை ப்ரியா பவானிசங்கர் வீட்டில் நிகழ்ந்த சோகம்: நெகிழ்ச்சியுடன் செய்த பதிவு!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையான ப்ரியா பவானி சங்கர் தற்போது ஒரே நேரத்தில் சுமார் பத்து படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் ஒரு இரும்பு மனிதர், அசைக்கவே முடியாது: ரம்யா பாண்டியனின் இன்ஸ்டா பதிவு

நடிகரும் தயாரிப்பாளருமான அருண்பாண்டியன் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்திகள் வெளியானது

உங்கள் தொகுதியில் முதலமைச்சராக ஷில்பா பிரபாகர் நியமனம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னதாக சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அனைத்து மாவட்டங்களிலும் குறைத்தீர்ப்பு கூட்டத்தை நடத்தி அதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மனுக்களை பெற்று இருந்தார்.

கார்த்தி நழுவ விட்ட வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்ட விஷால்!

நடிகர் கார்த்தி நடிக்க வேண்டிய திரைப்படம் ஒன்றில் தற்போது விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன