ஓபிஎஸ் பேட்டிக்கு ஆதரவு கொடுத்த பிரபலங்கள் யார் யார்?

  • IndiaGlitz, [Wednesday,February 08 2017]

'சாது மிரண்டால் காடு தாங்காது' என்ற பழமொழிக்கேற்ப தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் சமாதி அருகே கொடுத்த பேட்டி தமிழக அரசியல் சரித்திரத்தில் இடம்பெறும் ஒருநாளாக அமைந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்கு பின் அவர் கலைத்த மெளனம் புயலாக மாறி தமிழக அரசியல் வட்டாரங்களை சுழன்றடித்து வருகிறது. இனிவரும் ஒருசில நாட்கள் பெரும் பரபரப்புடன் நகரும் என்று எதிர்பார்க்கும் நிலையில் ஓபிஎஸ் அவர்களின் பேட்டிக்கு கருத்து தெரிவித்த பிரபலங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு: 'தமிழக மக்களில் ஒரு சிலரைத் தவிர்த்து மற்ற அனைவரும் நிம்மதியாக தூங்குவார்கள், 'ஒரு நாயகன் உதயமாகிறான்'

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன்: 'சாது மிரண்டது, சுயமரியாதை வென்றது'

நடிகை கெளதமி: 'இதற்காகத்தான் அம்மா ஓ,பி.எஸ்ஸை தேர்ந்தெடுத்தார். அவர் மனசாட்சிப்படி நடக்கும் தைரியம் கொண்டவர். அம்மா தன் மீது வைத்திருந்த நம்பிக்கையை காப்பாற்றியுள்ளார்'

தயாநிதி அழகிரி: 'ஓ.பி.எஸ் இவ்வளவு துணிச்சலாய் செயல்படுவார் என எதிர்பார்க்கவில்லை. வாழ்த்துகள் முதல்வரே! ஆனால் எந்நேரமும் அவர் கட்சியிலிருந்து நீக்கப்படலாம்'

நடிகர் அருள்நிதி: 'தைரியமான பேச்சு ஓ.பிஎஸ் சார். உண்மையை உரக்கச் சொன்னதன் மூலம் தமிழக மக்களுக்கு உங்களின் நேர்மையை நிரூபித்துவிட்டீர்கள்'

நடிகர் சித்தார்த், 'ஓ.பி.எஸ் மெரினாவில் இருக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆஃப் கார்ட்ஸ் போன்ற சீரியல்களை நேரில் பார்ப்பது போல இருக்கிறது'

இசை அமைப்பாளர் இமான்: 'தமிழக அரசியலில் இப்போதுதான் நம்பிக்கை பிறக்கிறது. சரியான நேரத்தில் சரியான இடத்தில் சரியாக பேசியிருக்கிறார். நீதி வாழ்கிறது'

இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்: 'எவன் வந்து அடக்குவான் மறத்தமிழ் மகன் உனை, இறப்பினி ஒரு முறை, துணிந்து நீ பகை உடை. உலகுக்கு உரக்க சொல்!'

முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்திக் சிதம்பரம்: 'இறுதியாக ஓ.பி.எஸ் நிமிர்ந்து நிற்கிறார்'

இன்னும் பல பிரபலங்கள் ஓபிஎஸ் அவர்களின் அதிரடியை பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழக ஆளுனரின் சென்னை வருகை திடீர் ரத்தா?

தமிழக முதல்வராக இன்று அல்லது நாளை சசிகலா பொறுப்பேற்கும் வகையில் இன்று காலை தமிழக பொறுப்பு ஆளுனர்  வித்யாசாகர் ராவ் சென்னை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காகவே ஆளுனரின் மும்பை நிகழ்ச்சிகள் நேற்று ரத்து செய்யப்பட்டது...

மருத்துவமனையில் ஒருநாள் கூட ஜெயலலிதாவை சந்திக்கவில்லை. ஓபிஎஸ் அதிர்ச்சி தகவல்

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி 75 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த 75 நாட்களில் அனைத்து நாட்களிலும் இப்போதைய முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்தார். ஆனால் ஒருநாள்கூட அவர் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது...

10 சதவீதம்தான் சொல்லி இருக்கின்றேன். ஓபிஎஸ். மீதியை எப்போது சொல்வார்?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் நேற்றிரவு சென்னை மெரீனாவில் மீண்டும் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்...

மக்கள் கொடுங்கோலுக்கு எதிராக என்றுமே துணை நிற்பார்கள். கமல்ஹாசன்

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கிளப்பிய அரசியல் புயல் தமிழக அரசியலை சுழன்று அடித்து வருகிறது. இந்த புயலில் வீழ்பவர் யார்? எழுபவர் யார்? என்ற கேள்விக்கு இன்று விடை தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

நான் அம்மாவின் உண்மையான விசுவாசி. என்னை யாரும் நீக்க முடியாது. ஓபிஎஸ்

அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு  நடைபெற உள்ளதாக சசிகலா அறிவித்துள்ள நிலையில், பன்னீர் செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது...