கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதை நிறுத்துங்கள்… கோரிக்கை வைக்கும் WHO… ஏன்?

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பூஸ்டர் டோஸ் போடுவதை உலக நாடுகள் குறைந்தது செப்டம்பர் மாதம் இறுதிவரை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேட்டுக்கொண்டுள்ளார்.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் இரண்டாம் அலைத்தாக்கம் ஏறக்குறைய முடிவிற்கு வந்துவிட்டது. இந்நிலையில் மூன்றாம் அலை தாக்கம் சில நாடுகளில் துவங்கி இருக்கிறது. இந்த மூன்றாம் அலைத் தாக்கத்திற்கு டெல்டா வைரஸின் திரிபே காரணம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அதிகளவு பரவும் தன்மை கொண்ட டெல்டா வைரஸ் பரவலைத் தடுக்க சில பணக்கார நாடுகள் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் மருந்துகளும் செலுத்தப்பட்ட பின்பு மேலும் 3 ஆவதாக பூஸ்டர் டோஸ் செலுத்துவதை வாடிக்கையாக்கி வருகின்றன.

இப்படி பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய்ப் பாதிப்பில் இருந்து முற்றிலும் தப்பித்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது. ஆனால் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று WHO தெரிவித்து இருக்கிறது.

இந்நிலையில் 3 ஆவது டோஸ் செலுத்துவதால் பல ஏழை நாடுகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு அனுப்பப்படும் தடுப்பூசியின் அளவு மிகவும் குறைந்து போவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதனால் தடுப்பூசி செலுத்துவதில் பணக்கார மற்றும் ஏழை நாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைப்பதற்கு பூஸ்டர் டோஸ் போடுவதை குறைந்தது செப்டம்பர் மாதம் இறுதிவரை நிறுத்தி வைக்குமாறு உலகச்சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேட்டுக் கொண்டுள்ளார்.

More News

பாலியல் புகாரளித்த பெண்....! அநியாயத்திற்கு ஆதாரம் கேட்ட பல்கலைக்கழகம்......!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர் பாலியல் புகாரளித்தற்கு, ஆதாரம் கேட்டுள்ளது அந்த நிர்வாகம்.

ஹாக்கியில் பதக்கம் வென்ற 8 வீரர்களுக்கு தலா ரூ.1 கோடி பரிசு… அசத்தும் பஞ்சாப்!

டோக்கியோ ஒலிம்பிக்கில் ஜெர்மனிக்கு எதிரான ஆடவர் ஹாக்கி போட்டியில் வெற்றிப்பெற்று

48 மணி நேரத்தில்... தனுஷூக்கு நீதிபதி அளித்த உத்தரவு!

நடிகர் தனுஷின் ஆடம்பர கார் வரி விவகாரம் குறித்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்த போது தனுஷ் தரப்பிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை அடுக்கடுக்காக கேட்டார் என்பதை பார்த்தோம்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால் வீடு, கார் பரிசு: ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு வைர வியாபாரி அறிவிப்பு

ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியினர் பதக்கம் வென்று வந்தால் அவர்களுக்கு வீடு கட்ட பணம், வீடு இருப்பவர்களுக்கு கார் வழங்கவுள்ளதாக குஜராத் வைர வியாபாரி சவிஜ் தோலாக்கியா என்பவர் அறிவித்துள்ளார்.

அட்லி-ஷாருக்கன் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உள்ள திரைப்படத்தின் டீசர் வெளியாகும் தேதி குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.