close
Choose your channels

பிக்பாஸ்2: நல்லவர் யார்? கெட்டவர் யார்? இன்னுமா தெரியலை?

Saturday, September 22, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிக்கட்டம் நெருங்கிவிட்ட நிலையில் இன்றைய புரமோவில் நல்லவர் யார்? கெட்டவர் யார்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்று கமல்ஹாசன் கூறுகிறார்.

இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து கூறியபோது, 'இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்களுக்கு நல்லவர் யார்? என்பதில் வேண்டுமானால் குழப்பம் இருக்கலாம், ஆனால் கெட்டவர் யார் என்பது நான்காவது வாரத்திலேயே தெரிந்துவிட்டது. அந்த கெட்டவருக்கு தொடர்ந்து சேனலும், பிக்பாஸும் சப்போர்ட் செய்வதும் தெரிந்துவிட்டது. ஆனால் கமல்ஹாசனுக்கும் அவருக்கு எதிரே உட்கார்ந்திருக்கும் ஜால்ரா ஆடியன்ஸ்களுக்கும் மட்டும் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

இன்றாவது அதற்கு விடை கிடைக்குமா? என்று கமல்ஹாசன் கூறுகின்றார். அவர் சொல்வதில் இருந்து இன்றாவது மக்களால் வெறுக்கப்படும் நபர் வெளியேற்றப்படுவாரா? என்ற ஆதங்கம் இருப்பது அவரது குரலில் தெரிகிறது. இந்த பிக்பாஸ் சீசன் முழுவதும் எழுதி கொடுத்ததை வாசித்து கொண்டிருக்கும் கமல்ஹாசனால் ஆதங்கப்படுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஏனெனில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பிக்பாஸ் இடம் மட்டுமே உள்ளது. என்னதான் நடக்கப்போகிறது என்று இரவு வரை பொறுத்திருந்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.