close
Choose your channels

'இந்தியன் 2' படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதில் இந்த பிரபல நடிகையா?

Saturday, December 4, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ,லைக்கா நிறுவனத்தின் சுபாஸ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவான திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில பிரச்சனைகள் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக படப்பிடிப்பு நடக்கவில்லை என்றாலும் நீதிமன்றத்தின் தலையீட்டால் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் அதற்குள் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு விட்டதால் படப்பிடிப்பு மீண்டும் கிட்டத்தட்ட முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறிப்பாக இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடித்த காஜல் அகர்வாலுக்கு திருமணமாகி தற்போது அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுவதால் அவர் ’இந்தியன் 2’ படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது கசிந்துள்ள தகவலின்படி காஜல் அகர்வாலுக்கு பதில் நடிகை தமன்னா நடிக்க வாப்பு இருப்பதாகவும் அவரது காட்சிகள் மீண்டும் முதலில் இருந்து படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் நடிகர் விவேக் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த நிலையில் தற்போது அவர் உயிருடன் இல்லை என்பதால் அவரது காட்சிகளும் மாற்றப்படும் நிலையில் படக்குழுவினர் உள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.