close
Choose your channels

யார் சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? சுவாரசியம் நிறைந்த கருத்துக் கணிப்பு!!!

Monday, July 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யார் சிறந்த கேப்டன் கங்குலியா? டோனியா? சுவாரசியம் நிறைந்த கருத்துக் கணிப்பு!!!

 

ஐபில் கிரிக்கெட் போட்டி காலவரையறையின்றி ஒத்து வைக்கப் பட்டுள்ள நிலையில் கிரிக்கெட் ரசிகர்களைத் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு கருத்துக் கணிப்புகளை இந்திய கிரிக்கெட் அகடாமிகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. அந்தவகையில் தற்போது ஸ்டோர் ஸ்போர்ட்ஸ் மற்றும் ESPN Cricket info நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு சர்வேயில் யார் சிறந்த கேப்டன் அல்லது யார் அணிகளிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்திய கேப்டன் என்றொரு கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது. அந்தக் கருத்துக் கணிப்பில் முன்னாள் கேப்டன் கங்குலியை நூலிழையில் வென்றிருக்கிறார் டோனி.

இந்தக் கருத்துக் கணிப்பு முன்னாள் வீரர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், 8 நாடுகளில் உள்ள ஒளிபரப்பாளர்களிடையே நடத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் அதிகப் புள்ளிகளைப் பெற்று டோனி இந்த சர்வேயில் வெற்றிப் பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் கங்குலியே அதிக புள்ளிகளை பெற்றிருக்கிறார். அதுமட்டுமல்லாது தான் அணிக்குள் கொணடு வந்த வீரர்களை வைத்து அணியை பலமாக உருவாக்கியதில் கங்குலியே சிறந்தவராகவும் கருதப்படுகிறார். கங்குலி அணி வீரர்களிடையே அதிக தாக்கத்தை கொண்ட கேட்படனாகவும் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது நடைபெற்ற சர்வேயில் சில புள்ளிகள் அதிகமாக பெற்று டோனி சிறந்த கேப்டனாகவும் தாக்கம் கொண்டவராகவும் முன்னணி வகிக்கிறார்.

உள்நாடு/ வெளிநாடு டெஸ்ட் போட்டிகளில் வழிநடத்தியமை, வெள்ளைப் பந்து போட்டிகளின் செயல்பாடு, அணி வீரர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது, பேட்டிங்கில் சாதனை என்ற வகையிலான பல்வேறு கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. அதில் கங்குலியை நூலிழையில் பின்னுக்குத் தள்ளி டோனி வெற்றிப் பெற்று இருக்கிறார். கங்குலி 21 உள்நாட்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பதவி வகித்து இருக்கிறார். அதில் 10 போட்டிகளில் அணிக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. டோனி 30 உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியிருக்கிறார். அதில் 21 போட்டிகளில் அணி வெற்றிப் பெற்றிருக்கிறது.

29 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் கங்குலி கேப்டனாக இருந்திருக்கிறார். அதில் இந்திய அணி 11 போட்டிகளில் வெற்றிப் பெற்றிருக்கிறது. டோனி 30 வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்திருக்கிறார். வெறுமனே 6 போட்டிகளில் மட்டுமே இந்தியாவிற்கு வெற்றிக் கிடைத்து இருக்கிறது. வெளிநாட்டு போட்டிகளைப் பொறுத்த வரை கங்குலியே முன்னிலை வகிக்கிறார். இந்த புள்ளிகளைப் பொறுத்த வரையில் டோனி உள்நாட்டு டெஸ்ட் போட்களில் 8.2 சர்வே புள்ளிகளையும் கங்குலி 7.4 புள்ளிகளையும் பெற்றிருக்கின்றனர். வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் கங்குலி 7.2 சர்வே புள்ளிகளையும் டோனி 5.5 சர்வே புள்ளிகளையும் பெற்றிருக்கிறார்.

ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சி பதவியில் டோனி 8.1 சர்வே புள்ளிகளைப் பெற்று கங்குலியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். கங்குலி ஒருநாள் போட்டிகளில் 6.8 சர்வே புள்ளிகளை மட்டுமே பெற்றிருக்கிறார். அணியை உருவாக்கியதில் கங்குலியே முன்னிலை பெற்ற கேப்டனாக அறியப்படுகிறார். அதனால் 8.6 சர்வே புள்ளிகளையும் டோனி 7.3 சர்வே புள்ளிகளையும் கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த அணி வீரர்களிடையேயும் அதிக தாக்கத்தைக் கொண்ட கேப்டனாக கங்குலி 8.1 சர்வே புள்ளிகளையும் டோனி 7.9 சர்வே புள்ளிகளையும் பெற்றிருக்கின்றனர்.

கேப்டன் பேட்டிங் சாதனையில் டோனி 7.8 சர்வே புள்ளிகளையும் கங்குலி 7.4 சர்வே புள்ளிகளையும் கொண்டிருக்கின்றனர். அணியில் தாக்கம் மிகுந்த கேப்டனாக கங்குலியே அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் ஒருநாள் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்று டோனி சிறந்த கேப்டனாக தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீரர்களிடையே அதிக தாக்கத்தையும் அணியை உருவாக்கியதில் வலிமை மிக்க கேப்டனாகவும் கங்குலி அதிக புள்ளிகளைப் பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.