யார் முதல்வர் வேட்பாளர்? பளிச் பதில் கூறிய ரஜினிகாந்த்!

  • IndiaGlitz, [Thursday,November 21 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும், உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களும் இணைந்து தேர்தலை சந்தித்து வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால், யார் முதல்வர் வேட்பாளர் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. கமல்தான் முதல்வர் வேட்பாளர் என நேற்று ஸ்ரீப்ரியா சொன்ன கருத்து பெரும் சர்ச்சையாகிய நிலையில் இன்று இந்த கேள்விக்கு ரஜினிகாந்த் பளிச்சென பதிலளித்தார்.

கூட்டணி, முதல்வர் வேட்பாளர் யார் என்பது தேர்தல் நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவு என்றும், அதுகுறித்து இப்போது எதுவும் பேச முடியாது என்றும் அரசியல் கட்சி ஆரம்பித்தவுடன் எனது கட்சியினர்களுடன் கலந்து ஆலோசித்து இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் கூறினார்.

மேலும் நான் வாங்கிய இந்த விருதுக்கு தமிழ் மக்கள் தான் காரணம் என்றும் இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றும் கூறினார். மேலும் அதிமுகவின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரஜினி, ‘2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய அதிசயத்தை, அற்புதத்தை தமிழக அரசியலில் தமிழ் மக்கள் நிகழ்த்துவார்கள் என்று தெரிவித்தார்.
 

More News

காதலில் வெற்றி பெற விஷம் குடித்த வாலிபர்: அதிர்ச்சியில் மனைவி

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம்பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் அவரது பெற்றோர்கள் வேறு பெண்ணை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்து விட்டனர்.

நான் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்? ரஜினி கமல் குறித்து சினிமா பிரபலம் 

கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவரும் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் போது நிலையில் இருவரும் இணைந்தால்

கவுதம் மேனனின் அடுத்த படத்தில் 'குருதிப்புனல்' கனெக்சன்

கமல்ஹாசன், அர்ஜூன், கவுதமி நடிப்பில் கடந்த 1995ஆம் ஆண்டு வெளியான வெற்றி திரைப்படம் 'குருதிப்புனல் இந்த படத்திற்கு கோவிந்த் நிஹாலனி கதையும் கமல்ஹாசன் திரைக்கதையும் எழுத

ஜனவரி 1ல் விஜய் ரசிகர்களுக்கு தரமான 'சம்பவம்'

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை! தொண்டர்கள் அதிர்ச்சி

ஒரு பக்கம் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் அரசியல் பணிகள் என இந்த வயதிலும் பிசியாக இருக்கும் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.