close
Choose your channels

நேரடியாக ஃபைனலுக்கு செல்லும் பிக்பாஸ் போட்டியாளர் இவர்தான்

Thursday, September 13, 2018 • தமிழ் Comments

பிக்பாஸ் வீட்டில் முதல் சீசனின் போட்டியாளர்கள் ஏற்கனவே ஐந்து பேர் வந்திருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ் முதல் சீசனின் வின்னர் ஆரவ் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை முடிவு செய்யும் ஃபைனலுக்கு நால்வர் செல்லவுள்ள நிலையில் அதில் ஒருவரை இன்று ஆரவ் தேர்வு செய்கிறார்.

ஆம், பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு ஆரவ் ஒரு டாஸ்க் கொடுக்கின்றார். இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் போட்டியாளர் நேரடியாக ஃபைனலுக்கு செல்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் போட்டியாளர் அனைவரும் மிகுந்த கவனத்துடன் இந்த டாஸ்க்கில் ஈடுபடுகின்றனர்

இந்த டாஸ்க்கில் ஒவ்வொருவருக்கும் ஒரு தண்ணீர் நிரப்பப்பட்ட கோப்பை கொடுக்கப்படுகிறது. தண்ணீரை கொட்டாமல் ஒருவர் பின் ஒருவர் நடக்க வேண்டும். யார் அதிகமான தண்ணீரை வைத்துள்ளார்களோ அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவார். ஏற்கனவே எவிக்சன் பிராஸஸ் தொடங்கிவிட்ட நிலையில் ஒருவேளை இந்த டாஸ்க்கில் வெற்றி பெறும் நபர் வெளியேற்றப்பட்டால் என்ன ஆகும்? என்ற கேள்வியும் எழுகிறது.

 

Get Breaking News Alerts From IndiaGlitz