'பீஸ்ட்' டிரைலரில் உள்ள முகமூடி போட்ட வில்லன் யார்? பரபரப்பு தகவல்


Send us your feedback to audioarticles@vaarta.com


தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் முகமூடி போட்ட வில்லன் யார் என்ற கேள்வி தற்போது பரபரப்பாக சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ‘பீஸ்ட்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த டிரைலரில் ஒரு முகமூடி போட்ட வில்லன் மாலில் உள்ள பொதுமக்களை பணய கைதியாக வைத்து இருக்கும் காட்சிகளை பார்த்தோம்.
இந்தபடத்தில் செல்வராகவன் தான் முக்கிய வில்லன் என்று கூறப்பட்ட நிலையில் அவருடைய கேரக்டர் அரசுக்கும் தீவிரவாதிகளும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை அதிகாரி என்பது டிரைலரில் உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து ‘பீஸ்ட்’ படத்தில் பிரபல மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ மற்றும் அன்கூர்விக்கல் ஆகிய இருவரும் நடித்துள்ள நிலையில் இந்த இருவரில் ஒருவர்தான் இந்த முகமூடி போட்ட வில்லனாக இருக்கும் என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். குறிப்பாக மலையாள நடிகர் சைன் டாம் சாக்கோ தான் அந்த முகமூடி போட்ட வில்லன் என்று பலர் கூறி வருகின்றனர். இருப்பினும் படம் வெளிவந்த பிறகுதான் உண்மையில் அந்த வில்லன் நடிகர் யார் என்பது தெரியவரும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments