close
Choose your channels

திடீரென உள்ளே வந்த வைல்ட்கார்ட் போட்டியாளர்: யார் இவர்?

Tuesday, November 23, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களையும் தாண்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இதுவரை சில போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர் என்பதும் வெளியேற்றப்பட்ட போட்டியாளர்களின் ஒருவரான அபிஷேக் மீண்டும் ரீஎன்ட்ரி ஆகி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக ஒரு போட்டியாளர் வர வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பாக டான்ஸ் மாஸ்டர் சதீஸ் அல்லது விஜய்யின் நண்பர் சஞ்சீவ் ஆகிய இருவரில் ஒருவர் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் இன்றைய முதலில் புரமோவில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்தவரின் காட்சி உள்ளதை பார்த்து பார்வையாளர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். எந்தவித புரமோவும் இல்லாமல் திடீரென வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்தவர் யார் என்பது குறித்து நெட்டிசன்கள் அலசி ஆராய்ந்து வருகின்றனர்

இந்த நிலையில் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தவர் டான்ஸ் மாஸ்டர் அமீர் என்று நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரிவாக பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.