பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? பரபரப்பு தகவல்!

பிக்பாஸ் 3 சீசன் நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் பிக்பாஸ் சீசன் 3, டைட்டில் வின்னர் யார் என்பது நாளை இரவு தெரிந்துவிடும். வெற்றியாளரை தேர்வு செய்ய வாக்குகள் பதிவு செய்யப்படுவது நேற்றுடன் முடிந்துவிட்டது. இந்த நிலையில் யார் வெற்றியாளராக இருக்கும்? என்பதை அறிய பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஆன்லைனில் பிக்பாஸ் வெற்றியாளர் யார்? என்பது குறித்த வாக்குப்பதிவில் முகின் பெயர் தான் அதிகம் தெரிகிறது. கடந்த இரண்டு நாட்களில் முகினுக்கு அதிக வாக்குகள் விழுந்திருப்பதாகவும், அதனால் அவரே டைட்டில் வின்னர் என்றும் கூறப்படுகிறது

இருப்பினும் லாஸ்லியாவுக்கும் சாண்டிக்கும் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும் முகினுக்கும் லாஸ்லியாவுக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் மிகவும் குறைவாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது. வாக்குகள் அடிப்படையில் ஷெரின் நான்காவது இடத்தில் உள்ளார்.

கவினின் வெளியேற்றம் லாஸ்லியாவுக்கு சாதகமாக இருந்தது என்றால், தர்ஷனின் வெளியேற்றம் முகினுக்கு சாதகமாக மாறியது என்பதும் ‘நீ வெற்றி பெற்றால் நானே வென்றது போல் மகிழ்வேன்’ என்று தர்ஷன் கூறியதால் அவரது ஆதரவாளர்கள் முகினுக்கு அதிகம் வாக்களித்திருக்க வாய்ப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது