மும்பையில் 7 மணி நேரம் தண்ணீரில் நின்று பொதுமக்களை காப்பாற்றிய பெண் யார்? பரபரப்பு தகவல்

  • IndiaGlitz, [Monday,August 10 2020]

கடந்த 2 நாட்களுக்கு முன்பு முன்னர் மும்பையில் பெய்த கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது என்றும் இதனையடுத்து மேற்கு மும்பையில் உள்ள துள்சி பைப் என்ற பகுதியில் இருந்த பாதாள சாக்கடை ஒன்று திறந்து இருந்ததால் அந்த பாதாள சாக்கடை அருகில் ஒரு பெண் சுமார் 7 மணி நேரம் வெள்ள நீரில் நின்றுகொண்டு வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்டியாக இருந்தார் என்பதையும், இது குறித்த வீடியோக்கள் வைரல்ஆகியது என்பதையும் பார்த்தோம்

இந்த நிலையில் தற்போது அந்த பெண் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்தப் பெண்ணின் பெயர் காண்டா மூர்டி என்றும் அவர் பூ விற்கும் வியாபாரி என்று தற்போது தெரியவந்துள்ளது. தனது உடல் நலமில்லாத கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை காப்பாற்ற தான் அந்த பகுதியில் பூ விற்பனை செய்து வருவதாகவும் சம்பவத்தன்று பாதாள சாக்கடை மூடப்படாமல் இருந்ததாகவும் அந்த பகுதியில் வரும் வாகன ஓட்டிகளுக்கு அபாயமாக இருக்கும் என்றுதான் கருகியதால் அந்த இடத்தில் சுமார் 7 மணி நேரம் நின்று வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்ததாகவும் கூறினார்

அதன் பிறகு மும்பை கார்ப்பரேசன் அதிகாரிகள் வந்து என்னை அனுப்பி விட்டு பாதாள சாக்கடையை சரி செய்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார் அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. தனது உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அந்தப் பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

More News

இளம் நடிகரின் மடியில் உட்கார்ந்து பியானா வாசிக்கும் பிக்பாஸ் தமிழ் நடிகை: காதலா?

இளம் நடிகர் ஒருவரின் மடியில் உட்கார்ந்து பிக்பாஸ் தமிழ் நடிகை ஒருவர் பியானோ வாசிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து இருவரும் காதலிக்கிறார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது 

அண்ணன் முறை வாலிபருடன் மகள் உறவு: அவமானத்தில் தூக்கில் தொங்கிய பெற்றோர்

தங்களுடைய மகள் அண்ணன் முறை உள்ள வாலிபர் ஒருவருடன் உறவு வைத்துக் கொண்டதை கண்டித்து பார்த்தும் அவர் கேட்காததால் அவமானத்தில் அவருடைய பெற்றோர்கள் தூக்கில் தொங்கிய

மருத்துவமனையில் இருந்து தப்பிய கொரோனா நோயாளி நடுரோட்டில் மரணம்: என்ன நடந்தது?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களில் ஒரு சிலர் மன அழுத்தம் காரணமாக மருத்துவமனையில்

இந்தோனேசியாவில் 400 ஆண்டு பழமையான எரிமலை வெடித்து சிதறியதால் ஏற்பட்ட பயங்கரம்!!!

இந்தோனசியாவில் 100 க்கும் மேற்பட்ட ஆபத்தான எரிமலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல இயக்குனரின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட்: ஜிவி பிரகாஷ் அறிவிப்பு

ஜிவி பிரகாஷ் நடித்து இசையமைத்து வரும் படங்களில் ஒன்றான 'ஜெயில்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது விறுவிறுப்பாக போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும்