close
Choose your channels

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா??? காங்கிரஸ்க்கு எதிராகத் திரும்பியது ஏன்??? 

Tuesday, March 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

 

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா??? காங்கிரஸ்க்கு எதிராகத் திரும்பியது ஏன்??? 


மத்தியப் பிரதேச சட்ட சபையில் முதல்வர் கமல்நாத்தின் ஆட்சி தொடருமா? என்பது தற்போது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பவர் ஜோதிராதித்ய சிந்தியா. இவரைப் பற்றித்தான் தற்போது ஊடகங்கள் அனைத்தும் பேசி வருகின்றன.  
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு என்ன நேர்ந்தது? ஏன் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியை விட்டு விலகினார் என்பது குறித்து அரசியல் ஆலோசகர்கள் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மத்தியப் பிரதேசத்தின் சட்டமன்ற தொகுதிகள் மொத்தம் 230. இம்மாநிலத்தில் கடந்த 2018 டிசம்பரில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும் 2 பகுஜன் சமாஜ் மற்றும் 1 சமாஜ்வாடி, 4 சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவை பெற்று காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது. முதல்வராக கமல்நாத் பொறுப்பேற்று கொண்டார். 

மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத்திற்கு அடுத்தப் படியாக ஜோதிராதித்ய சிந்தியா இருக்கிறார். அம்மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கு முக்கிய பங்கு வகித்தவரும் இவர்தான் என்று சொல்லப் படுகிறது. நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் இவருக்கே முதல் பதவி கொடுக்கப் படும் என நினைத்த சிந்தியாவிற்கு காங்கிரஸின் மேலிடம் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. இந்த ஏமாற்றம்தான் கட்சி விலகலுக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. 

கமல்நாத்தின் ஆட்சி அமைக்கப் பட்டதில் இருந்தே சிந்தியா கடும் நெருக்கடியைக் கொடுத்து வந்ததாக சொல்லப்படுகிறது. 2018 இல் சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றியை பெற்ற காங்கிரஸ் பின்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கடும் தோல்வியைச் சந்தித்து என்பதும் குறிப்பிடத் தக்கது.

மேலும், கட்சிக்குள் இருந்தவாறே சிந்தியாவின் ஆதரவாளர்கள் அரசை விமர்சித்தும் வந்தனர். ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டது முதலே மத்தியப் பிரதேச சட்டசபையில் கடும் குழப்பங்கள் ஆரம்பித்தன. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக மீண்டும் சோனியா காந்தி பொறுப்பேற்று கொண்டார். 

மத்தியப் பிரதேசத்தில் சோனியா காந்தியின் ஆதரவாளர்கள் கை ஓங்கிய நிலையில் சிந்தியா ஓரம் கட்டப் பட்டார். சிந்தியா குறுகிய வட்டத்திற்குள் வரவேண்டிய சூழலில் இவரது ஆதரவாளர்கள் எந்தக் கட்சிப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இதனால் பல முரண்பாடுகள் முளைத்தன. 

இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் 17 பேர் பெங்களூரில் தங்கியிருப்பதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.  இன்று மாலை காங்கிரஸின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் சிந்தியாவின் ஆதரவு  எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்களா? மாட்டார்களா? என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

ஒருவேளை சிந்தியாவின் ஆதரவாளர்கள் 17 பேரும் எம்எல்ஏக்களின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றால் மத்திய பிரதேசத்தில் சட்டசபை இன்னும் 2 நாட்களில் கலைக்கப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். சிந்தியா பா.ஜ.க. வில் இணையப் போகிறாரா? என்ற எதிர்ப் பார்ப்பும், கேள்வியும் ஒரு பக்கம் தொற்றிக் கொண்டிருக்கிறது. 

ஆனால், இது காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி பிரச்சனை என்றும் இதை பா.ஜ.க தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் சில விமர்சனங்கள் சொல்லப்படுகின்றன. 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சிந்தியா தனது டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் நிர்வாகி என்ற வாக்கியத்தை நீக்கினார். அவரது டிவிட்டரில் தற்போது கிரிக்கெட் ஆர்வலர் என்ற தகவல் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. சென்ற வாரத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களையும் சிந்தியா பேசி இருந்தார். அதில் “இந்த ஆட்சி சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை என்றால் நான் இருக்கிறேன். இதற்காக சாலையில் கூட இறங்கி போராடுவேன்” என்று தெரிவித்து இருந்தார். தற்போது சிந்தியாவின் கட்சி விலகல் பற்றிய செய்தி வெளியாகி இருக்கிறது. 

இன்று இரவு 7 மணிக்கு பா.ஜ.க. வும் மத்தியப் பிரதேசத்தில் எம்எல்ஏக்கள் கூட்டத்தை கூட்ட இருக்கிறது. அம்மாநில ஆளுநர் லால்ஜி தாண்டனும் தற்போது போபாலுக்கு வந்திருக்கிறார். காங்கிரஸ், பா.ஜ.க என இருவேறு பட்ட முரண்பாடுகளுக்கு இடையில் சிந்தியா எடுக்கும் முடிவே இறுதியாக இருக்கும். இதற்கிடையில் தனது அதிருப்திக்கான காரணங்களை கூறுவாரா என்று ஊடகங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன. 

யார் இந்த ஜோதிராதித்ய சிந்தியா???
மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஆட்சியில் தற்போது மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா பெரும் அரசியல் வரலாற்றுப் பின்புலம் கொண்டவர். இவரது தாத்தாக்கள் குவாலியர் பகுதியை ஆண்டு வந்த ராஜ வம்சத்தினர்.  இராஜ வம்சத்தை சார்ந்தவர்கள் என்பதால் இவரது குடும்பமே அரசியலில் கொடி கட்டி பறந்து இருக்கிறது. 

சிந்தியாவின் அப்பா, மாதவராவ் 1971  முதல் 9 முறை லோக்சபா தேர்தலில் போட்டி இட்டு இருக்கிறார். ஒரு முறை கூட தேர்தலில் தோற்கவில்லை என்பதே சிறப்பு. முதல் தேர்தலை ஜனசங்கத்தில் இருந்து போட்டி இட்டு வென்றார். பின்பு சுயேட்சையாக நின்று பல தேர்தல்களில் வென்றார் என்பதும் குறிப்பிடத் தக்கது. பின்பு மாதவராவ் சிந்தியா காஙகிரஸ் கட்சியில் இணைந்தார். தொடக்க கால தலைவர்களுக்கு இவர் மிகவும் நெருக்கமானவராக இருந்திருக்கிறார்.  முக்கியமாக இந்திரா காந்தி, ராஜீவ் காந்திக்கு ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவராக பணியாற்றி இருக்கிறார். ஆரம்பக் காலக் கட்டம் முதலே ராஜ குடும்பமான சிந்தியாவின் குடும்ப செல்வாக்கை காங்கிரஸ் பயன்படுத்தி வந்ததாகவும் சொல்லப் படுகிறது. 

காங்கிரஸ் ஆட்சியின் கீழ் பல்வேறு மத்திய அமைச்சர் பதவியையும் மாதவராவ் சிந்தியா வகித்து இருக்கிறார். அவரைப் பின்பற்றி அரசியலுக்குள் வந்த ஜோதிராதித்ய சிந்தியா 1980 இல் காங்கிரஸில் இணைந்தார். 1984 இல் நடைபெற்ற லோச்பா தேர்தலில் குவாலியர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். தனது முதல் தேர்தலில் இவர் பா.ஜ.கவின் வாஜ்பாயை தோல்வி அடைய செய்தார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் காங்கிரசில் மிக முக்கியமான புள்ளியாகவே சிந்தியா செயல்பட்டு இருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில்  பல்வேறு அமைச்சர் பதவிகளையும் வகித்து இருக்கிறார். 2018 இல் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது சிந்தியா என்றே சொல்லப்படுகிறது. முதல்வர் பதவியை எதிர்ப்பார்த்த நிலையில் பெருத்த ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது. தற்போது கட்சி விலகல் முடிவை எடுத்து இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

மத்தியப் பிரதேச சட்டசபையில் அடுத்து என்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பதை இந்தியா முழுவதும் கேட்கப் பட்டு வருகிறது. ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருக்கிறார். இந்நிகழ்வு என்ன மாற்றங்களை கொண்டு வரப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பில் அனைத்து ஊடகங்களும் பரபரப்பாக இருக்கின்றன. 


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.