இசையமைக்க ஒப்புக்கொண்டு திடீரென விலகிய அனிருத்.. 7 பாடல்கள் தான் காரணமா?


Send us your feedback to audioarticles@vaarta.com


கவின் நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் இசையமைக்க அனிருத் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளியான நிலையில், திடீரென அவர் அந்த படத்தில் இருந்து விலகியதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னால் தகவல் வெளியானது.
இந்த தகவலை உறுதி செய்யும் வகையில், இன்று வெளியான ஒரு அறிவிப்பில் அனிருத்துக்கு பதிலாக ஜென்மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் கவின் நடித்து வருகிறார் என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளர் என்று முதலில் கூறப்பட்ட நிலையில், அதன் பின்னர் அவர் விலகி விட்டதாகவும், அவருக்கு பதிலாக ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் என்றும் கூறப்பட்டது. இவர் ஏற்கனவே கவின் நடித்த ‘டாடா’ படத்திற்கும் இசையமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று மாலை 05.04 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஜென் மார்ட்டின் பெயரும் உள்ளதால், அனிருத்துக்கு பதிலாக ஜீன் மார்ட்டின் இந்த படத்தின் இசையமைப்பாளர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மியூசிக்கல் லவ் கதையம்சம் கொண்ட படம் என்றும், இந்த படத்தில் ஏழு பாடல்கள் இருப்பதால்தான் அனிருத் விலகி விட்டார் என்றும் கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்திற்கு "கிஸ்" என்ற டைட்டில் வைத்ததாக கூறப்பட்ட நிலையில், அதே டைட்டில் தான் இன்று மாலை வெளிவருமா, அல்லது வேறு டைட்டில் வெளிவருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Ungaluku ichu ichu endraa ketkiradhu?
— raahul (@mynameisraahul) February 10, 2025
Maalai 5.04 manikku sandhippom ♥️#RomeoPictures4TitleReveal & #Kavin’s next@kavin_m_0431 @mynameisraahul @dancersatz @dop_harish @jenmartinmusic @peterheinoffl #MohanaMahendiran @preethiasrani_ @editorrcpranav @iamgunashekar… pic.twitter.com/uJ7VR97cVs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments