சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு வருமா? தமிழ்நாடு வெதர்மேன் கூறுவது என்ன?

  • IndiaGlitz, [Monday,March 19 2018]

இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கிவிட்டது. வெயில் வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்து வரும் அதே நேரத்தில் கோடையில் குடிதண்ணீருக்காகவும் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு சென்னைக்கு குடிநீர் பற்றாக்குறை வருமா? அல்லது கிருஷ்ணா நதிநீர் போன்று பிற மாநிலங்களில் கையேந்தும் நிலை வருமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் கூறுவதை பார்ப்போம்

இந்த வருடம் நமது சென்னைக்கு தண்ணீர் தட்டுப்பாடு என்ற கவலை இல்லை. அது எப்படி என்பதை பார்ப்போம். நமது தண்ணீர் தேவைக்கு இருப்பாக ஐந்து டி.எம்.சி இருந்து வருவதாக தெரியவருகிறது. கடந்த ஐந்தாண்டு காலங்களில் நமது நீராதார சேமிப்பு வகையில் கண்டால் இரண்டாவது முறையாக மிக சிறந்த வகையில் மழை நீர் மூலம் நமக்கு சேமிப்பாக இவ்வருடம் கிடைத்ததை கூறலாம். அது 2015 ஆம் வருட வெள்ள காலத்திற்கும் பிறகு நமக்கு 2016 ஆம் ஆண்டு மிக சிறந்த நீர் சேமிப்பு ஆண்டாக இருந்தது. சென்ற 2017 ஆம் ஆண்டில் சென்னை தமது வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தினால் பெற்ற மிக சிறந்த மழை அளவினை பெற்றது எனலாம்.

ஆகவே இந்த வருட கோடை காலத்தை சமாளிக்க நமக்கு மிக சிறந்த மழையின் கொடையாக கிடைத்த ஐந்து டி.எம்.சி. தண்ணீர் நமது சேமிப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் சென்னை குடிநீர் வாரியமும் தமது பத்திரிக்கை தகவல் வாயிலாக செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதாவது சென்னையில் இந்த கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இராது என்றும் மேலும் அதன் பொருட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமது பத்திரிக்கை செய்தியை மக்களுக்கு தகவலாக தெரிவித்துள்ளது.

சென்னைக்கு குடிநீர் தரும் நீர்நிலைகளின் இந்த ஆண்டு இருப்பு குறித்து தற்போது பார்ப்போம்

செம்பரப்பாக்கம் - 1348 MCft  கடந்த ஆண்டு - 458 MCft

ரெட் ஹில்ஸ் - 1411 MCft கடந்த ஆண்டு - 441 MCft

பூண்டி - 1882 MCft, கடந்த ஆண்டு 601 MCft

சோழாபுரம் - 286 MCft, கடந்த ஆண்டு 6 MCft

இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

More News

திருச்சி உஷாவின் மரணத்திற்கு காரணம் இதுதான்: நீதிபதியின் விளக்கம்

சமீபத்தில் திருச்சியில் ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜா-உஷா தம்பதியினரை விரட்டி சென்ற காவலர் ஒருவரின் மனிதநேயமற்ற செயலால், உஷாவின் உயிர் பரிதாபமாக பலியானது.

தில்லையில் தினேஷ் கார்த்திக் கட்-அவுட்! ரசிகர் மன்றம் எப்போது?

இதுவரை தமிழக இளைஞர்கள் கோலிவுட்டின் பெரிய ஸ்டார்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் மட்டும்தான் கட்-அவுட் வைத்து நாம் பார்த்துள்ளோம்

விஜய்யின் எளிமைக்கு எடுத்துக்காட்டு கூறிய ராதாரவி

விஜய் மிகப்பெரிய நடிகராக இருந்தாலும் அவர் ஒரு எளிமையான மனிதர். உடன் நடிக்கும் நடிகர்களை ஊக்குவிப்பதை அவர் தவறுவதில்லை.

'காலா' நாயகிக்கு ரஜினி வீட்டில் இருந்து வந்த உணவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படத்தின் நாயகி ஹூமா குரேஷிக்கு ரஜினி விட்டில் இருந்து உணவு வந்த தகவலை அவர் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சூர்யாவின் அடுத்த பட நாயகி ப்ரியாவாரியர்?

சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் 'NGK' என்ற படத்தில் நடித்துவருகிறார். திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் முடிந்தவுடன் சில வாரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிடும் என தெரிகிறது.