தல தோனி 7.29க்கு ஓய்வை அறிவிக்க இதுதான் காரணமா? பரபரப்பு தகவல்

கடந்த 15ஆம் தேதி இந்திய நாடே சுதந்திர தின விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது சரியாக இரவு 7.29 மணிக்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை தல தோனி அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள், இந்நாள் கிரிக்கெட் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், அனைத்து மாநில முதல்வர்கள் என பலரும் தோனியின் ஓய்வு முடிவு குறித்த தங்களது கருத்துக்களை சமூகவலைதளத்தில் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் தோனி சரியாக 7.29 மணிக்கு ஓய்வு அறிவிப்பை வெளியிட என்ன காரணம் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி போராடி தோல்வி அடைந்தது. அந்த போட்டியில் தோனி ரன் அவுட் மூலம் விக்கெட்டை இழந்தார் என்பதும் அவரது விக்கெட் இழப்பிற்கு பின் இந்தியாவின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த போட்டியில் கடைசி விக்கெட்டாக சாஹல் ஆட்டமிழந்து இந்தியா தோல்வி கண்ட நேரம் சரியாக 7.29 மணி தான். இந்த போட்டி தான் தோனி விளையாடிய கடைசி போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது

இதனைக் குறிப்பிடும் வகையில்தான் தோனி சரியாக 7.29 மணிக்கு தனது ஓய்வு முடிவை அறிவித்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

More News

பேண்ட்டை திருப்பி போட்டுட்டாரா ஷிவானி? நெட்டிசன்கள் கிண்டல்

சின்னத்திரையில் பிரபலமான ஷிவானி நாராயணன் தினமும் தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

பேஸ்புக் பழக்கத்தில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம்: கர்ப்பமானதும் கைவிட்டு போன கணவர்!

ஃபேஸ்புக் பழக்கத்தில் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் கர்ப்பமானதும் தனது கணவர் தன்னை விட்டு போனதால் தற்போது பெரும் சிக்கலில் உள்ளார் 

கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பிய தமிழ் நடிகர்-அரசியல்வாதி!

தமிழகத்தில் தினந்தோறும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் நூற்றுக்கும் மேலானவர்கள் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்

ரஜினி-கமல் இணையும் படம் குறித்து லோகேஷ் கனகராஜின் பதில்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 'மாஸ்டர்' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படம்

சென்னையில் டாஸ்மாக் திறக்கும் தேதி அறிவிப்பு!

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வந்ததால் டாஸ்மாக் கடைகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டது.