close
Choose your channels

ரஜினி-சிவா சந்திப்பு ஏன்? ஒரு விளக்கம்

Tuesday, May 28, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை அவரது போயஸ் தோட்ட வீட்டில் இன்று இயக்குனர் சிவா அவர்கள் சந்தித்து பேசினார் என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பால் பல்வேறு ஊகங்கள் ஊடகங்களில் வெளியானது. ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்குவாரா? என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் இந்த சந்திப்பு குறித்து ரஜினியின் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. ரஜினி-சிவா சந்திப்பு குறித்து ஊடகங்களில் வெளியாகி கொண்டிருக்கும் ஒருசில செய்திகளில் உண்மை இல்லை என்றும், இந்த சந்திப்பில் இயக்குனர் சிவாவின் முந்தைய படத்தின் வெற்றிக்கு ரஜினி வாழ்த்து கூறியதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து ரஜினி-சிவா சந்திப்பு குறித்து வெளியான பல வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குனர்கள் பட்டியலில் சிவா இருப்பார் என்றே கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.