நான் ஏன் அழுகிறேன் தெரியுமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகை சமந்தா சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கும் போது அழுவதாகவும், அவரது கண்ணில் இருந்து கண்ணீர் பீறிட்டுக் கொண்டு வருவதாகவும், அவரது மனதில் நீங்காத வலி இருப்பதாகவும் கூறப்பட்டு வரும் நிலையில், இது போன்ற வதந்திகளுக்கு சமந்தா பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:
"நேற்று விசாகப்பட்டினத்தில் நான் தயாரித்த 'சுபம்' என்ற திரைப்படத்தின் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விசாகப்பட்டின மக்களுக்கு எனது நன்றி. நீங்கள் என் மீது காட்டும் அன்புக்கும் ஆதரவுக்கும் மிகப்பெரிய நன்றியை தெரிவிக்கிறேன்.
மேலும், நான் கண்கலங்கும் காட்சிகள் குறித்து இணையத்தில் பரவலாக ஒரு செய்தி பரவி வருகிறது. இது குறித்து நான் ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறேன். ஆனாலும் மீண்டும் கூறுகிறேன். என் கண்கள் மிகவும் சென்சிட்டிவானது. அதிகமான ஒளிகள் கொண்ட விளக்குகளை பார்த்தால் என் கண்ணில் இருந்து தானாக கண்ணீர் வரத் தொடங்கும்.
இதனை பார்த்த பலரும் நான் எமோஷனல் ஆகி அழுவதாக தவறாக புரிந்து கொள்கின்றனர். நான் நன்றாக இருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். எனக்கு எந்த மனக்கவலையும் இல்லை," என்று சமந்தா கூறியுள்ளார்.
#Watch | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை சமந்தா!#SunNews | #Samantha pic.twitter.com/PWQqOfy6GU
— Sun News (@sunnewstamil) May 6, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments