குளிருக்கு ஆல்கஹால் செட் ஆகாதா??? இந்திய வானிலையின் எச்சரிக்கை அறிவிப்பு!!!

 

குளிர்காலத்தில் கொஞ்சம் ஆல்கஹால் இருந்தாலே போதும் எனப் பரவலான கருத்து நிலவிவரும் சூழலில் அந்தக் கருத்து தவறானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. தற்போது டெல்லி உட்பட பல வடமாநிலங்களில் மைனஸ் 4-5 க்கும் கீழ் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் மது அருந்துவது மேலும் சிக்கலை ஏற்படுத்தலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.

ஹரியாணா, பஞ்சாப், உத்திரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் தற்போது குளிர் அதிகரித்து இருக்கிறது. இதனால் பல இடங்களில் மக்களுக்கு காய்ச்சல், சளி, ஜன்னி போன்ற அபாயம் ஏற்படலாம் எனவும் மருத்துவர்கள் எச்சரித்து உள்ளனர். மேலும் குளிருக்கு இதமாக ஆல்கஹாலை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

உண்மையில் ஆல்கஹால் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. ஆனால் இது சரியான கருத்து இல்லையாம். ஆல்கஹால் உடல் வெப்பநிலையை அதிகரிப்பதை விட உண்மையில் குறைக்கவே செய்கிறதாம். இதனால் உடலில் மேலும் குளிர்ச்சி ஏற்படுகிறது. ஏற்கனவே குளிர் நிலவும் சூழலில் இந்நிலைமை உங்கள் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்க வேண்டி வரும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் இராணுவ ரிசர்ச் பல்கலைக்கழத்துடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ஆல்கஹால் உடலின் முக்கிய வெப்பநிலையைக் குறைக்கும் என்பது தெரியவந்துள்ளது. இதனால் குளிர் பிரதேசத்தில் உடலில் மேலும் வெப்பநிலை குறையும் அபாயம் ஏற்பட்டு விடும். மேலும் இந்நேரங்களில் உடலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்தியையும் மது குறைத்து விடுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே மதுவை தவிர்த்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் – சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடவும் சூடான திரவங்களை குடிக்கவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். மேலும் குளிரினால் ஏற்படும் தோல் தடிமன், உணர்ச்சியற்றுப் போதல், தோல் கறுப்பாகி போதலுக்கு எண்ணெய் தடவுவது மற்றும் கிரீம்களை பூசுவது போன்றவற்றையும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

More News

கண் புற்றுநோய்க்கு புது சிகிச்சை… இந்திய விஞ்ஞானிகளின் அசத்தல் சாதனை!!!

இந்தியாவின் பாபா அணுசக்தி மையம் கடந்த சில வருடங்களாக மக்களுக்குப் பயன்படும் பல புதிய கண்டுபிடிப்புகளை கொண்டு வந்துள்ளது.

அதுவும் நடக்காம போச்சே: தந்தையான யோகிபாபுவின் ஜாலி கமெண்ட்!

கல்யாண சாப்பாடு தான் போட முடியவில்லை என்றால் சீமந்த சாப்பாடாவது போடலாம் என்று நினைத்தேன், ஆனால் அதுவும் நடக்காமல் போச்சு என்று நண்பர்களிடம் யோகி பாபு ஜாலியாக கமெண்ட் அடித்துள்ளார் 

மாலையும் கழுத்துமாக சரத்குமார்-ராதிகா: புகைப்படம் வைரல்

நடிகர் சரத்குமாருக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் குணமானார்

'மாஸ்டர்' படத்திற்கு புரமோஷன் செய்த தனுஷ்!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகமெங்கும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

நாடு முழுவதும் ப்ளூ ஜீன்ஸ்க்கு தடையா??? இப்படியொரு விசித்திரம் எங்கு தெரியுமா???

உலகின் மர்மப்பிரதேசமாகத் திகழும் வடகொரியாவில் ப்ளூ ஜீன்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது