close
Choose your channels

மற்ற கிருமிநாசினியை விட, சோப் ஏன் நல்லது???

Thursday, April 9, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மற்ற கிருமிநாசினியை விட, சோப் ஏன் நல்லது???

 

கொரோனா பரவலைத் தடுப்பதில் ஆல்கஹால் கொண்ட கிருமிநாசினிப் பொருட்களைவிட சோப்புகள் அதிக திறனுடன் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. உண்மையில் கொரோனாவுக்கு மட்டுமல்ல பெரும்பாலான வைரஸ் தொற்றுகளுக்கும் பாக்டீரியா தொற்றுக்களுக்கும் சோப் ஒரு சிறந்த தடுப்புப்பொருளாகக் கருதப்படுகிறது. காரணம் வைரஸ்களின் மேலுள்ள கொழுப்பு படர்ந்த உறையினை இந்தச் சோப்புகள் சுலபமாக கரைத்துவிடுகிறது.

கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ்களை நுண்ணோக்கியால் பார்க்கும் போது சூரியனின் ஒளிக்கதிர்களைப் போல கூர்மையாக இதன் புரதங்கள் நீட்டிக் கொண்டிருக்கின்றன. வைரஸ்கள் உள்ளே பத்திரமாக இருக்க, அவற்றின்மேல் எண்ணெய் படலங்கள் உறைகளாக செயல்படுகின்றன

இதே போல அனைத்து வைரஸ்களின்மேலும் கொழுப்பு போன்ற புரதங்களாலான உறைகள் காணப்படுகிறது. இந்த உறையை முழுவதுமாக சோப் கரைத்துவிடும். வைரஸ்களுக்கு உயிர் கிடையாது. பெரும்பாலும் மனிதன் மற்றும் விலங்கு செல்களின் தேவையற்றப் பொருள்களாக இருந்து, நோயைப் பெருக்கும் ஆற்றலை வைரஸ்கள் கொண்டிருக்கின்றன. மனிதனின் செல்களுக்குள் நுழைவதற்கு வசதியாக வைரஸ்கள் புரதங்களையே பயன்படுத்துகிறது. இந்த புரதங்கள் மேலுறைகளால் மூடப்பட்டிருக்கும். இந்த மேலுறையை சோப்புக்கொண்டு, கரைத்துவிடும்போது வைரஸ்கள் செயலற்றதாக மாறிவிடுகிறது.

கிருமிநாசினிகள் (Desinfectants), திரவங்கள் (Liquids), துடைப்பான்கள் (Wipes), ஜெல் மற்றும் ஆல்கஹால் (Gel & Alcohol) கொண்ட கிரீம்கள் அனைத்தும் கொரோனா முதற்கொண்டு அனைத்து வைரஸ்தொற்றுக்கும் எதிராக காலம் காலாமாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இவை வழக்கமான ஆல்கஹால் மற்றும் சோப்பை விட அதிகமான ஆற்றலோடு செயலாற்றுவதில்லை. பாக்டீரியா மற்றும் வைரஸ் கொழுப்பு உறையை கரைப்பதில் இந்தப்பொருட்கள் முழுமையான ஆற்றலோடு செயலாற்றுவதில்லை. சோப் முற்றிலும் பாதுகாப்பாக உணரவைக்கும் திறன்கொண்டது என்றாலும் அதைப் பயன்படுத்துவதில் சிரமங்கள் இருப்பதால்தான் நாகரிமான மனிதர்களாகிய நாம் துடைப்பான்கள் மற்றும் ஜெல்களை பயன்படுத்தி வருகிறோம்.

பெரும்பாலான வைரஸ்கள் மூன்று முக்கியமான கட்டுமானத் தொகுதிகளைக் கொண்டிருக்கின்றன. RNA & Lipids வைரஸ்களின் மேலுள்ள புரதத்திற்கும் மேலுறைக்கு இடையில் நானோ மீட்டர் அளவுக்குத்தான் இடைவெளி இருக்கிறது. இந்த நெருக்கமான வைரஸ் தொகுதியை அழிப்பதற்கு சோப் தவிர மற்றகிருமிநாசினிகள் பயன்படாது. கொரோனா முதற்கொண்டு பெரும்பாலான வைரஸ்கள் 50-200 நானோ மீட்டர் இடைவெளியில் நானோ துகள்களாகவே செயல்படுகிறது. மேலும் பொருடகளின்மீதும் அதிக நாட்கள் வாழும் தன்மைக்கொண்டது. தோல், இரும்பு, மரம், துணி, பெயிண்ட் மற்றும் கண்ணாடி போன்ற பொருட்களின்மீது படர்ந்துவாழும் தன்மைக்கொண்டது.

புரதங்களின் உதவியால் உடலுக்கு உள்ளே செல்லும் வைரஸ்கள் தானாக உற்பத்தி ஆவதில்லை. தனது வைரஸை மற்ற செல்களுக்கும் பரப்பி பாதிப்பை ஏற்படுத்துகிறது. வைரஸ் தொற்று அனைத்து செல்களையும் பாதிக்கும்போது உடலில் பல நோய்கள் தோன்ற ஆரம்பிக்கிறது. சளி, காய்ச்சல், இருமல் மற்றும் சுவாச உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு ஒருவர் இருமினாலோ அல்லது தும்மினாலோ குறைந்தது 30 அடி வரை நீர்த்துளிகள் தெறிக்க வாய்ப்பு இருக்கிறது. 7 அடி வரை பரவவும் செய்கிறது. அப்படி பரவும் நீர்த்துளிகள் விரைவிலோ காய்ந்துபோகின்றன. ஆனால் நீர்த்துளிகளில் உள்ள வைரஸ்கள் அழிவதில்லை. இந்தக் காரணங்களால்தான் முகக்கவசம் அணியவேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

பொருட்களின் மேற்பரப்பில் தங்கும் கொரோனா வைரஸ் அந்தப் பொருட்களின் தன்மையைப் பொறுத்து அதன் தங்கும்நேரமும் மாறுபடுகிறது. வைரஸ்களுடன் ஹைரட்ரஜன் இணைந்து இருப்பதால் மரத்தினால் செய்யப்பட்ட பொருட்களின்மீது அதிக நேரம் வாழும் தன்மைக்கொண்டதாக இருக்கிறது. இரும்பு, எஃகு போன்ற பொருட்களுடன் குறைவான பிணைப்பை மட்டுமே வைரஸ்கள் கொண்டிருக்கின்றன. தோலின்மீது கொரோனா வைரஸ்கள் அதிக நேரம் தங்குவதற்கான தன்மையைக் கொண்டிருக்கிறது. எனவே தான் கொரோனா வைரஸ் தங்கியுள்ள பொருட்களைத் தொட்டுவிட்டு நம்முடைய மூக்கு, வாய்ப்போன்ற உறுப்புகளைத் தொடுவதால் கொரோனா தொற்று எளிதாகப் பரவிவிடுகிறது.

சோப் ஏன் பயன்படுத்த வேண்டும்

மனிதர்களின் கைகள், பெரும்பாலும் கரடு முரடாகவும் சுருக்கமாகவும் இருக்கிறது. கைகளின் மேற்பரப்புகளில் சிக்கிக்கொள்ளும் வைரஸ்களை எளிமையாக அழிப்பதற்கு சோப் ஒரு சிறந்த பொருளாக இருக்கிறது. வைரஸ்களை அழிப்பதற்கு உருவாக்கப்படும் கிருமிநாசினிப் பொருட்கள் பெரும்பாலும் ஆல்கஹால் கலக்கப்படுகின்றன. ஆனாலும் வைரஸ்க்கு பொருட்களின் மீதுள்ள ஹைட்ரஜன் பிணைப்பை குறைப்பதற்கு 60% காட்டிற்கு மேலும் ஆல்கஹால் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். அதேபோல ஆல்கஹால் நேரடியாக வைரஸை கொல்லவும் செய்யாது. காரணம் வோட்கா போன்ற ஆல்கஹாலில் 40% எத்தனால் இருக்கிறது. இந்த எத்தனால் வைரஸ்களை முழுமையாக அழிப்பதில் தடையாக இருக்கிறது. மேலும், ஆல்கஹால் வைரஸின் மேலுறை அழித்து வைரஸ் புரதத்தை சீர்க்குலைக்க மட்டுமே உதவுகிறது.

கிருமிநாசினிகளில் ஆல்கஹால் மட்டுமே சிறந்த வினைபுரிவதில்லை. இதற்காக Isopropanol உடன் தண்ணீர் சேர்க்கப்படுகிறது. இந்த வினைகள் அனைத்தும் சோப்புகளில் மிக எளிமையாக பொருந்தியிருக்கின்றன. எனவே வைரஸ்களை அழிப்பதில் சோப் சிறந்த தடுப்பு பொருளாக பார்க்கப்படுகிறது.

கொரோனா போன்ற வைரஸ்கள் கிட்டத்தட்ட நானோ துகள்கள் போல அனைத்துப்பொருட்களிலும் ஒளிந்துகொண்டிருக்கின்றன. இந்தவகையான பொருட்களை நாம் தொட்டு விட்டு நமது முகம், தோலை தொடுவதால் கொரோனா பற்றிக்கொள்ளும் அபாயம் இருக்கிறது. கொரோனாவை தடுப்பதில் வெறுமனே நீர் மட்டும் அதிகப் பயனைத்தராது. ஆல்கஹால் கலந்த கிருமிநாசினிகள் தேவைப்படுகிறது. அதிலும் சோப் மிக திறமையுடன் செயலாற்றுகின்றன. சோப் அதிக நுரைத்தருவதாலும் அதிக நேரம் கைகளை கழுவுவதாலும் அதில் வைரஸ்கள் தனது உறையைவிட்டு கழண்டு எளிதாக கீழே விழுந்துவிடும். எனவே சோப்பை பயன்படுத்தி முறையான பாதுகாப்பினைப் பெறுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.