சமூக விலகல் (Social Distancing) ஏன் அவசியமாகிறது??? விலகலில் பல வகைகள்!!!

  • IndiaGlitz, [Monday,March 30 2020]

 

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. ஆனாலும் சாலைகளில் வாகனங்கள் செல்வதைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறையினர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகின்றனர். இதற்கு இந்திய மக்களின் உளவியல் நிலையும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. நமக்கெல்லாம் கொரோனா வந்துவிடுமா? என்ற அலட்சியம் ஒருபக்கம், இதுவரை சார்ஸ், மெர்ஸ் போன்ற புதியவகை கொள்ளை நோய்களை இந்திய மக்கள் நேரடியாக அனுபவித்தது இல்லை என்பதும் இன்னொரு காரணமாக இருக்கிறது.

ஆப்பிரிக்கா, சீனா போன்ற பல நாடுகளில் அடிக்கடி கொள்ளை நோய்கள் வந்து மக்களின் மனிதில் எப்போதும் ஒரு பயத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. நம்நாட்டிலும் காலரா, மலேரியா, தட்டம்மை போன்ற நோய்களுக்கு கடந்த நூற்றாண்டுகளில் அதிகம் பேர் இறந்துள்ளனர் என்றாலும் புதிய வகை வைரஸ் நோய்களால் அதிம்பேர் பாதிக்கப்படவில்லை. நிபா, பறவைக்காய்ச்சல் போன்ற நோய்கள் இந்நூற்றாண்டில் குறைந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதும் மட்டுமே இந்த தலைமுறையினருக்கு தெரிந்த அச்சம்.

கொள்ளை நோய்களைப் பற்றிய அனுபவம் குறைவாக இருப்பதும், பொருளாதார நிலைமைகள் திருப்திகரமாக இல்லாமல் இருப்பதும் இந்தியாவில் பெரும் பிரச்சனைகளாக இருக்கின்றன. இந்தக் காரணங்களால்தான், “சமூத் தொடர்பில் இருந்து விலகி இருங்கள்” என்ற வாக்கியத்தை ஊடகங்கள் சொல்லிக்கொண்டே இருந்தாலும் அதன் அர்த்தத்தை மக்கள் உள்வாங்கிக்கொள்வதில் சிரமம் இருக்கிறது.

சமூக விலகல் (Social Distancing)

ஒரு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் பாதிப்புக்கு உள்ளாவதைத் தவிர்க்கவும் சில வழிமுறைகளைக் கண்டிப்பாகக் கடைபிடித்தே ஆகவேண்டும். அதற்கு முடிந்தவரை வீட்டிலேயே தங்கி பொது இடங்கள், கடைகள், கூட்டம் ஆகியவற்றைத் தவிர்ப்பதன் மூலம் சமூகத்தில் இருந்து விலகுதல் அவசியம். இதைத்தான் Social Distancing எனக் கூறுகின்றனர்.

கண்காணிப்பில் வைத்திருத்தல் (Quarantine)

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் அவர்களுடன் தொடர்புடைய நபர்கள் என இந்திய அரசாங்கம் பலரை தனிமையில் வைத்திருக்கிறது. காரணம் இவர்களுக்கு நோய் தொற்று வருவதற்கான சாத்தியங்கள் அதிகம். அவர்களது வீடுகளிலேயே தனித்து இருக்குமாறு இந்த நபர்களை அறிவுறுத்தி இருக்கிறது இந்திய அரசு. வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் அதிகமாக உரையாடிய நபர்களும் இப்படி தனிமையில் வைக்கப்படுகிறார்கள்.

தனிமைப்படுத்துதல் (Isolation)

கொரோனா வைரஸ் கிருமிகளின் அறிகுறிகள் இருப்பவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துப் படுகின்றனர். அவர்கள் நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிப்படுத்தப் படவில்லையென்றாலும் கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

தன்னைத் தானே தனிமைப்படுத்தல் (Self Isolation)

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டவர்கள், அல்லது தங்களுக்கு நோய் அறிகுறிகள் இருப்பதாகச் சந்தேகம் கொண்டவர்கள் இப்படி தங்களைத் தாங்களாகவே சுயத் தனிமைப்படுத்தலுக்கு ஆட்படுத்திக் கொள்கின்றனர். தற்போது, சுய தனிப்படுத்தலும் அவசியமான ஒன்றாகவே கருதப்படுகிறது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் தங்களைத் தாங்களாகவே வீடுகளில் பலர் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்கின்றனர்.

உணர்வுப்பூர்வ விலகல் (Emotional Distance)

கொரோனா பற்றியே எல்லா ஊடகங்களும் செய்தித்தாள்களும் பேசிவரும் வேளையில் (Emotional Distance) கூட அவசியமுள்ள ஒன்றாகவே கருதப்படுகிறது. அதாவது சமூக விலகலில் இருந்தும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுதலை Emotional Distance என்பர். கொரோனா பற்றிய அழுத்தம், பயம் ஏற்படும் நிலையில் சமூக ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள் போன்ற எல்லாவற்றிலும் இருந்து தங்களை பாதுகாப்பான முறைகளில் தனிமையாக வைத்துக்கொள்வதும் இப்போதைக்கு அவசியமான ஒன்றுதான்.

More News

கொரோனா 3 ஆம் கட்டம் என்றால் என்ன??? இந்தியாவின் நிலைமை???

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரண்டாம் கட்டத்தை எட்டியிருக்கிறது.

சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு இலங்கை அரசு எச்சரிக்கை

உலகம் முழுவதும் பரவி ஏராளமான மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கையிலும் தாக்கி உள்ளது.

பொருளாதாரத்தைச் சீர்செய்யவே முடியாது!!! மனமுடைந்த ஜெர்மன் நிதியமைச்சர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை!!!

கொரோனா பாதிப்பினால் உலகம் கடும் பொருளாதாரப் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில்

ரூ.750 கோடி கொரோனா தடுப்பு நிதி கொடுத்த பிரபல விளையாட்டு வீரர்

உலகப்புகழ் பெற்ற முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியோனோ ரொனால்டோ கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக இந்திய மதிப்பில் சுமார் 750 கோடி நிதியளித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுடன் வந்தால் மது வழங்கப்படும்: முதல்வர் அறிவிப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்