'பகவத் கேசரி' ரீமேக் அல்ல 'ஜனநாயகன்'.. ஆனாலும் ரீமேக் உரிமையை பெற்றதற்கு இதுதான் காரணம்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


பிரபல தெலுங்கு நடிகர் பாலையா நடித்த 'பகவத் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் தான் தளபதி விஜய் நடித்து வரும் ‘ஜனநாயகன்’ என்றும், இதற்காக ‘ஜனநாயகன்’ படக்குழு ரூ.4.5 கோடி கொடுத்து ’பகவத் கேசரி’ படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில் தற்போது ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. ’பகவத் கேசரி’ படத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய காட்சியில் Good Touch மற்றும் Bad Touch என்ற கான்செப்ட் உள்ளது என்றும், அந்த ஒரு கான்செப்ட் மட்டும்தான் ‘ஜனநாயகன்’படத்தில் படக்குழுவினர் பயன்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மொத்தத்தில் ‘ஜனநாயகன்’ என்பது பகவத் கேசரியின் முழுமையான ரீமேக் அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது. அந்த ஒரு காட்சியை பயன்படுத்தியதால் சட்ட ரீதியாக எந்த பிரச்சனையும் எழாமல் இருக்கவே, முறைப்படி ’பகவத் கேசரி’ ரீமேக் உரிமையை ‘ஜனநாயகன்’படக்குழு பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே, ‘ஜனநாயகன்’படத்தின் கதை வேறு, பகவத் கேசரியின் கதை வேறு. கதைக்களமும் வேறு. Good Touch - Bad Touch என்ற ஒரே ஒரு கான்செப்ட்டிற்காக மட்டுமே ரீமேக் உரிமை பெறப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தரப்பிலிருந்து தகவல் கசியியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments