சுந்தர் சியின் 'மத கஜ ராஜா' ஏன் ஓடிடியில் வெளியாகவில்லை.. என்ன சிக்கல்?


Send us your feedback to audioarticles@vaarta.com


பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வெற்றி பெற்றால் அந்த படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் போட்டி போடும் என்பதை தெரிந்தது. ஆனால் ’மதகஜராஜா’ என்ற திரைப்படம் திரையரங்கில் வெளியாகி சுமார் 60 கோடிக்கு மேல் வசூலான நிலையில், இந்த படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி உள்ளிட்ட ஒரு நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'மதகஜராஜா’ என்ற திரைப்படம், கடந்த 2013 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரானது. ஆனால், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு சில பிரச்சனைகள் இருந்ததால், படம் கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் முடங்கிய நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வெளியானது.
இந்த படம் 60 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில், ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என்று கூறப்பட்டாலும், அது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. இந்த படம் உருவாகி 12 ஆண்டுகள் ஆகியுள்ளதால், ஓடிடியில் வெளியிடும் உரிமங்களை பெறுவதில் சில நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், அந்த பிரச்சனைகள் விரைவில் சரி செய்யப்பட்டு ஹாட்ஸ்டாரில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments