மோடி ஆதரவாளர் என்பதால் என்னுடன் ஒரு ஹீரோ நடிக்க மறுத்துவிட்டார்: எஸ்.வி.சேகர்


Send us your feedback to audioarticles@vaarta.com


நான் பிரதமர் மோடியின் ஆதரவாளர் என்பதால், என்னுடன் ஒரு ஹீரோ நடிக்க மறுத்துவிட்டார் என்று நடிகர் எஸ்.வி. சேகர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியான ’டெஸ்ட்’ திரைப்படத்தில், சித்தார்த்தின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க என்னைத்தான் முதலில் அழைத்திருந்தார்கள். கால்ஷீட் கேட்டு பணம் அட்வான்ஸ் கூட கொடுத்துவிட்டார்கள்.
படப்பிடிப்பு தொடங்குவதற்கு சில நாட்கள் முன், திடீரென அந்த படத்தின் தயாரிப்பாளர் என்னிடம் வந்து, "உங்களுடன் நடிகர் சித்தார்த் நடிக்க முடியாது" என்று தெரிவித்தார். ஏன் என்று கேட்டபோது, "நீங்கள் மோடி ஆதரவாளர்; அவர் மோடி எதிர்ப்பாளர். அதனால் உங்களுடன் நடித்தால் அவரை சமூக வலைதளங்களில் விமர்சிப்பார்கள் என்று பயப்படுகிறார்" என்று கூறினார்.
இதையடுத்து, "என்னுடன் நடிக்க முடியாது என்றால் சித்தார்த் எனக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு கொடுக்க வேண்டும்" என்று கூறினேன். ஆனால் அதன் பின்னர் தயாரிப்பு தரப்பிலிருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், "இந்த படத்தின் கதை மாற்றப்பட்டுவிட்டதால், உங்கள் கதாபாத்திரம் இதில் இல்லை. அதனால் உங்களை நடிக்க வைக்க முடியவில்லை" என்று கூறினார்கள். அவரது இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments