காதலர் வருவார் என பொய் சொன்னேன்: கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திய இளம்பெண்ணின் ஆடியோ!

  • IndiaGlitz, [Monday,November 02 2020]

நீலகிரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் திடீரென தனது காதலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என கூறி திருமணத்தை நிறுத்திய சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது அவர் ஆடியோ ஒன்றின் மூலம் திருமணத்தை நிறுத்தியது ஏன்? என்று விளக்கம் அளித்துள்ளார்

நீலகிரி மாவட்டம் மட்டகண்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த இரு வீட்டார் ஏற்பாடு செய்திருந்தனர். மணமக்கள் இருவரும் மணக்கோலத்தில் மேடையில் இருந்தபோது மணமக்களின் சமூகத்தின் மரபுப்படி பெண்ணுக்கு திருமணம் செய்ய சம்மதமா? என கேட்கப்பட்டது. அப்போது பிரியதர்ஷினி திடீரென தனக்கு இந்த திருமணத்தில் சம்மதம் இல்லை என்றும் தன்னுடைய காதலர் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்றும் அவரைத் தான் திருமணம் செய்யப் போகிறேன் என்றும் கூறினார்

இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகளின் பெற்றோர் அவரை தாக்க முயன்றதாகவும் அதன் பின்னர் அங்கு இருந்தவர்கள் சமாதானம் செய்ததாகவும் செய்தி வெளிவந்தன. இந்த நிலையில் திடீரென தன்னை மணக்க சம்மதம் இல்லை என்று மணமகள் கூறியதால் மணமகன் தர்மசங்கடம் அடைந்து, அதன்பின் அவர் தனது பெற்றோருடன் திருமண மண்டபத்தில் இருந்து வெளியேறியதால் இந்த திருமணம் நிறுத்தப்பட்டது

இந்த நிலையில் மணப்பெண் பிரியதர்ஷினி தனது காதலரை தேடி சென்னைக்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து அவர் ஆடியோ ஒன்றின் மூலம் விளக்கமளித்துள்ளார். தனக்கு காதலன் என்று யாரும் இல்லை என்றும் காதலனை தேடி சென்னைக்கு வந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் வதந்தி என்றும் தன்னுடைய பெற்றோருடன் தான் இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட இளைஞர் மீது பல தவறான தகவல்கள் தனக்கு கிடைத்ததாகவும் அதனால்தான் திருமணத்தை நிறுத்த காதலன் இருப்பதாக பொய் கூறியதாகவும், தான் தன்னுடைய பெற்றோருடன்தான் சந்தோஷமாக இருப்பதாகவும் அவர் அந்த ஆடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அரசியலா? திமுக எதிரணிக்கு ஆதரவா? குருமூர்த்தியுடன் ரஜினிகாந்த் திடீர் ஆலோசனை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது உடல்நிலையை கணக்கில் கொண்டு அரசியலுக்கு வரமாட்டார் என்று கூறப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு ஓரிரு மாதங்களுக்கு முன் திடீரென

ஆரியா? அர்ச்சனாவா? நேருக்கு நேர் மோதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாமினேஷன் படலம் நடக்கும் என்பதும் இந்த நாமினேஷன் படலத்தில் சிக்கியவர்களில் ஒருவர் அந்த வாரம் வெளியேற்றப்படுவார் என்பதும் தெரிந்ததே

ஆந்தாலஜி திரைப்படத்திற்காக இணையும் ரஜினி, விஜய், அஜித் இயக்குனர்கள்!

தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்கள் தற்போது ஆந்தாலஜி திரைப்படங்களை இயக்கி வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது 'விக்டிம்'

வழுக்கை தலையை மறைத்து திருமணம்: போலீஸில் புகார் அளித்த மணமகள்!

வழுக்கைத் தலையை மறைத்து விக் வைத்து தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கணவர் மீது புதுமணப் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

ஆபாச வீடியோக்களை லட்சக்கணக்கில் விற்ற பஸ் கண்டக்டர்: ஏமாந்த பட்டதாரி பெண்கள்!

பட்டதாரி பெண்களிடம் வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டி அவர்களுடன் உல்லாசமாக இருந்தபோது எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை