சிம்புவை நாங்கள் தியாகம் செய்தோம்: 'எஸ்டிஆர் 50' தயாரிப்பில் இருந்து விலகியது குறித்து கமல்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருந்த "எஸ்.டி.ஆர் 50" என்ற திரைப்படத்தை, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால், திடீரென அந்த படத்தின் தயாரிப்பில் இருந்து ராஜ்கமல் நிறுவனம் விலகிவிட்டது. தற்போது அந்த படத்தை சிம்புவே ஏ.ஜி.எஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், கே.எஸ். ரவிக்குமார், கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், சிம்பு ஆகியோர் இடையே நடந்த கலந்துரையாடலில் இது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
’எஸ்.டி.ஆர் 50 ’படத்தின் தயாரிப்பில் இருந்து கமல் அவர்களே விலகி உள்ளார், இப்போது அந்த படத்தை நீங்களே தயாரிக்கிறீர்கள், என்ன காரணம்" என சிம்புவிடம் கே.எஸ். ரவிக்குமார் கேட்டபோது, கமல் சார் குறுக்கிட்டு "தக்லைஃப்’ படத்திற்கு சிம்பு தேவை என்பதால்தான் ’எஸ்.டி.ஆர் 50’ படத்தின் தயாரிப்பை நிறுத்தினோம். அந்த படத்தை தயாரித்திருந்தால், "தக்லைஃப்’ படத்தில் சிம்புவால் நடித்திருக்க முடியாது. அதனால் நாங்கள் சிம்புவை 'தியாகம்' செய்தோம்," என்று கூறினார்.
அதன்பின், "எஸ்.டி.ஆர் 50 படத்தில் நீங்கள் feminine ரோலில் நடிப்பதாக கேள்விப்பட்டேன். ஏற்கனவே கமல் சார் அதுமாதிரி ரோலில் நடித்துள்ளார், அஜித் நடித்துள்ளார், அந்த காலத்தில் சிவாஜியும் நடித்துள்ளார். நீங்களும் அந்தப்படத்தில் feminine ரோலில் நடிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அதுபோன்று ஒரு ஐடியா இருக்கிறது’ என்று சிம்பு தெரிவித்தார்.
About #STR50 (Desingh Periyasamy Film)#KamalHaasan: We need STR for Thuglife, that's why we sacrificed STR50. But now Simbu itself producing it🤝#SilambarasanTR: As I'm producing it, I can do whatever I think. I'm doing feminine role for one character🌟pic.twitter.com/1vwkS01Vma
— AmuthaBharathi (@CinemaWithAB) May 22, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com