சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறியது ஏன்? சிம்பு விளக்கம்

  • IndiaGlitz, [Tuesday,August 15 2017]

நடிகர் சிம்பு அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறுவதாக நேற்று அறிவித்துள்ளார். முதலில் இது வெறும் வதந்தி என்று சிம்பு ரசிகர்களால் கூறப்பட்டது. ஆனால் சிம்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டு இதை உறுதி செய்தார். அந்த ஆடியோவில் அவர் கூறியதாவது:

நான் அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் விலகுகிறேன். இதுகுறித்து யாரும் தவறான காரணத்தை நினைத்துவிட கூடாது என்பதால் இதுகுறித்த சரியான விளக்கத்தை கூற ஆசைப்பட்டேன். பொதுவாக டுவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நெகட்டிவ்வான நிலைதான் தற்போது உள்ளது. பெரும்பாலான சமூக வலைத்தள பயனாளிகள் என்னை மட்டுமின்றி அனைத்து நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் குறை சொல்லிக்கொண்டோ திட்டிக்கொண்டோ இருக்கின்றனர். யார் என்ன செய்தாலும் தவறு கண்டுபிடித்து கெட்ட கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து வருகின்றனர்.

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இஷ்டத்துக்கு எதையாவது கூறும் மனப்பான்மை அதிகரித்து வருகிறது. மேலும் மக்களுக்கு தெரிய வேண்டிய விஷயங்களை மறைத்துவிட்டு, தப்பான விஷயங்களை போகஸ் செய்து பெரிதாக்குகின்றனர். அதுமட்டுமின்றி பணம் வாங்கிக்கொண்டு பாசிட்டிவ் அல்லது நெகட்டிவ் விமர்சனம் செய்வது, போலியான பக்கங்கள் கிரியேட் செய்து அதன் மூலம் ஒருவரை வேண்டுமென்றே டார்கெட் செய்து விமர்சனம் செய்வது ஆகியவை விரும்பத்தகாத ஒன்றாக உள்ளது. நான் இண்டஸ்டிரியில் இருப்பதால் இதுபோன்ற தவறான செயல்கள் என் கண்ணுக்கு நேராக அப்பட்டமாக தெரிகிறது.

இதுமாதிரி செய்பவர்கள் யார் என்பது எனக்கு தெரியும். அவர்கள் குறித்து இங்கு பேசலாம், ஆனால் சிம்பு தன்னுடைய பெர்சனல் விஷயத்திற்காக பேசுகிறார் என்று சொல்வார்கள். அதனால் இவர்களை பற்றி நான் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை. மக்களே ஒருநாள் இந்த விஷயத்தை புரிந்து கொள்வார்கள்.

இந்த உலகில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது. நாம் எல்லோரும் மனிதர்கள் தான். நம்மை பிரித்து பிரித்துதான் இந்த அளவுக்கு அடிமையாக வைத்துள்ளார்கள். எனவே ஒற்றுமையாக இருக்க அனைவரும் முயற்சி செய்யுங்கள்.

சமூக வலைத்தளங்களில் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை பற்றி எதுவும் பேசாமல் இருப்பது நல்லது. அவரை தூற்றுவதற்கு பதிலாக நாலு பேர்களை தூக்கிவிட்டு அவர்களை சந்தோஷப்படுத்துவது சிறந்தது.

நான் சமூக வலைத்தளங்களில் இருந்து வெளியேறும்போது ஒரே ஒரு விஷயத்திற்காக மட்டுமே வருத்தப்பட்டேன். சிறிய தயாரிப்பு படங்கள், ஆரம்ப நிலையில் உள்ள இயக்குனர்கள், நடிகர்கள் ஆகியோர்களின் படங்களை எனது சமூக வலைத்தளத்தில் புரமோஷன் செய்தேன். இது ஒன்று மட்டும்தான் இனிமேல் செய்ய முடியாது என்ற வருத்தம் உள்ளது.

கடைசியாக ஒன்றே ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். இந்த உலகத்தில் அன்பு மட்டுமே நம்மை காப்பாற்றும். வேறு எதுவும் நம்மை காப்பாற்றாது. நான் சொல்வதில் அர்த்தம் இருக்கும் என்று நம்புபவர்கள் தயவுசெய்து அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள். வணக்கம்.

இவ்வாறு நடிகர் சிம்பு தனது ஆடியோவில் தெரிவித்திருந்தார்.

More News

ஓவியா ஆர்மியினர்களிடம் வசமாக சிக்கிய காயத்ரி

ஓவியா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் வரை வேறு யாரும் இந்த ரியாலிட்டி ஷோவில் ஜெயிக்க வாய்ப்பே இல்லை என்பது அனைவருக்கும் புரிந்துவிட்டதால் அவரை திட்டம் போட்டு கார்னர் செய்து வெளியேற்றினர்...

'மெர்சல்' ஆடியோ விழா நேரடி ஒளிபரப்பு: விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

தளபதி விஜய் நடிக்கும் படத்தின் ஆடியோ விழா என்றாலே அன்றைய தினம் அவரது ரசிகர்களுக்கு ஒரு திருவிழா போன்றதுதான். இருப்பினும் நேரம், இடம் கருதி ஆடியோ விழா நடைபெறும் இடத்தில் ஒருசில குறிப்பிட்ட ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்...

பேரன்பின் ஆதி ஊற்று : நா.முத்துக்குமார்

ஒரு பாடலாசியர். ஆகஸ்ட் 14 ஆம் தேதி 2016 ல் இறந்துவிடுகிறார். ஆகஸ்ட் 11 ஆம் தேதி 2017 வரை கிட்டத்தட்ட ஒரு வருடமாக....

ராகவா லாரன்ஸ் படக்குழுவினர்களுக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்

ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் ரிலீஸ் ஆன தினமே 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டத்தினால் பெரும் சிக்கலை படக்குழுவினர் சந்தித்தனர்...

விமான பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த பிக்பாஸ் பங்கேற்பாளர்

பிக்பாஸ் தமிழ் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல நடிகர் ஒருவர் விமான பணிப்பெண்ணிடம் தவறாக நடக்க முயற்சி செய்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...