close
Choose your channels

நாங்க யார்கிட்டயும் காசு வாங்கவில்லை: அய்யாக்கண்ணு பேட்டி

Tuesday, April 9, 2019 • தமிழ் Comments

கடந்த ஐந்து ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் நிர்வாண போராட்டம் உள்பட பல்வேறு நூதனப்போராட்டம் நடத்திய விவசாயி சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு நேற்று டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த பின்னர் திடீரென பாஜகவுக்கு ஆதரவு என அறிவித்தார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை அளித்த நிலையில் செய்தியாளர் ஒருவர் அவரிடம் 'இந்த சந்திப்பில் அப்படி என்னதான் நடந்தது? உங்களது திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு அய்யாக்கண்ணு பதிலளித்ததாவது:

நடப்பதற்கு என்ன இருக்க? நாங்க யார் கிட்டயும் காசு வாங்கவில்லை? என்று வாண்ட்டடாக உளறிய அய்யாக்கண்ணு, அதன்பின்னர் 'கடந்த 2013ஆம் ஆண்டு முதல் நாங்கள் சில கோரிக்கைகளை மத்திய அரசின் முன் வைத்தோம். அந்த கோரிக்கைகளை அமித்ஷா அய்யா அவர்களை நேரில் சந்தித்தபோது கொடுத்தோம். அந்த கோரிக்கைகளை படித்து பார்த்த அமித்ஷா, எங்களது ஆறு கோரிக்கைகளில் ஐந்தை உடனடியாக ஏற்றுக்கொண்டார். வங்கிக்கடன் தள்ளுபடி கோரிக்கையை மட்டும் யோசித்து சொல்வதாக கூறினார். எங்களுடைய ஐந்து கோரிக்கைகள் ஏற்று கொள்ளப்பட்டதால் நான் பாஜகவுக்கு ஆதரவு என தெரிவித்தேன்' என்று கூறியுள்ளார்.

அய்யாக்கண்ணுவின் கடந்த கால போராட்டங்களுக்கு ஆதரவளித்த மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்பட பல அரசியல்வாதிகள் அவருடைய இந்த திடீர் மாற்றம் குறித்து எந்தவித கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Get Breaking News Alerts From IndiaGlitz