தினகரன் பின்னால் எம்.எல்.ஏக்கள் செல்வது ஏன்? துக்ளக் ஆசிரியர் விளக்கம்

  • IndiaGlitz, [Saturday,June 10 2017]

திஹார் ஜெயிலில் இருந்து ஜாமீன் பெற்று திரும்பி வந்த டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சுமார் 30 எம்.எல்.ஏக்கள் சென்றுள்ளதால் தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மூன்று முறை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸ் அவர்கள் அணியிலேயே வெறும் 12 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில் திடீரென தோன்றிய தினகரன் அணிக்கு ஆதரவு பெருகி வருவதை அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் தினகரனை சந்திக்க எம்.எல்.ஏக்கள் செல்வது ஏன் என்பது குறித்து துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி அவர்கள் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது: யாரையோ மிரட்டுவதற்குத்தான் எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து வருகின்றார்களே தவிர, தினகரன் அணிக்கு செல்வதால் தனக்கு அரசியலில் எதிர்காலம் இருப்பதாக கருதி எவரும் செல்லவில்லை

அதே நேரத்தில் தினகரன் தனிக்கட்சி ஆரம்பித்தால் அவர் பின்னால் ஒருவரும் செல்ல மாட்டார்கள் என்பது தான் உண்மை. தினகரனை தலைமைப்பண்புக்கு உரிய ஒரு நபராக நிச்சயம் யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். மேலும் இன்றைக்கு தமிழக மக்கள் பெரும்பாலானோர் வெறுக்கும் ஒரு குடும்பம் என்றால் அது மன்னார்குடி குடும்பம்தான். என்று குருமூர்த்தி கூறியுள்ளார்.