'வலிமை' படத்தின் பின்னணி இசை யுவன் இல்லையா? இந்த பிரபல இசையமைப்பாளரா?

அஜித் நடித்து முடித்துள்ள ’வலிமை’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் யூடியூபில் பார்வையாளர் எண்ணிக்கையில் இந்த டிரைலரின் வீடியோ மிகப்பெரிய சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பதும் இதுவரை வெளியாகிய இரண்டு பாடல்களும் சூப்பர்ஹிட் என்பதும் மற்ற பாடல்கள் இன்று வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வலிமை’ படத்தின் பின்னணி இசையை யுவன் சங்கர் ராஜா அமைக்கவில்லை என்றும், இந்த படத்தின் பின்னணி இசையை ஜிப்ரான் அமைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவான ’தீரன் அதிகாரம் ஒன்று’ படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்த நிலையில் ’வலிமை’ படத்திற்கும் அவர்தான் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்தின் ’ஆரம்பம்’ உள்பட ஒரு சில திரைப்படங்களுக்கு சூப்பராக பின்னணி இசை அமைத்துள்ள யுவன்சங்கர்ராஜா ’வலிமை’ படத்திற்கு ஏன் பின்னணி இசை அமைக்கவில்லை என்பது குறித்த காரணம் தெரியவில்லை என்பது குறிப்பிடதக்கது. இருப்பினும் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் ஜிப்ரானின் பின்னணி இசை ரசிகர்களை திருப்தி அடையும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
 

More News

பிரியங்காவை பாராட்டிவிட்டு நிரூப்பை சேவ் செய்த பார்வையாளர்!

பிரியங்காவை பாராட்டிவிட்டு நிரூப்பை சேவ் செய்த பார்வையாளரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ஒரே நாளில் எலிமினேட் ஆன அக்சரா-வருணுக்கு அடித்தது அதிர்ஷ்டம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒரே நாளில் எலிமினேட் ஆன வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவருக்கும் அதிர்ஷ்டம் அடித்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது 

'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலுக்கு செம ஆட்டம் ஆடும் ஷாலு ஷம்மு: வைரல் வீடியோ என்ற பாடலுக்கு நடிகை ஷாலு ஷம்மு செம நடனமாடி

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே தகுதி இல்லாதவர் ராஜூ: நிரூப் கூறிய அதிர்ச்சி காரணம்!

 பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கே தகுதி இல்லை என ராஜூவை நிரூப் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அஜித்தை புகழ்ந்து விஜய்டிவி புகழ் கூறியது என்ன தெரியுமா?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் விஜய் டிவி புகழ் ஒரு கேரக்டரில் நடித்து இருக்கும் நிலையில் அஜித் குறித்து சற்று முன் அவர் பதிவு செய்த டுவிட் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.