தள்ளிப் போகிறதா அனுஷ்காவின் ருத்ரம்மாதேவி?

  • IndiaGlitz, [Friday,August 21 2015]

எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் அனுஷ்கா நடித்த சரித்திர திரைப்படமான 'பாகுபலி' படத்தின் பிரமிப்பே இன்னும் மனதை விட்டு நீங்காத நிலையில் அனுஷ்காவின் மற்றொரு சரித்திரப் படமான 'ருத்ரம்மாதேவி' வரும் செப்டம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 'பாகுபலி' படத்தை தமிழில் ரிலீஸ் செய்த ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் ரிலீஸ் செய்யவுள்ள நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி விஷாலின் 'பாயும் புலி' மற்றும் சவாலே சமாளி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாவது உறுதியாகியுள்ளது.

செப்டம்பர் 17ஆம் தேதி விஜய்யின் 'புலி' வெளிவரவுள்ளதால் ருத்ரம்மாதேவி படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 11ஆம் தேதி அல்லது அக்டோபர் மாதத்தில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இயக்குனர் குணசேகர் தயாரித்து பிரமாண்டமாக இயக்கியுள்ள இந்த படத்தில் அனுஷ்கா ஷெட்டி, அல்லு அர்ஜூன், ராணா டக்குபாய், பிரகாஷ்ராஜ், சுமன், நித்ய மேனன், கேதரின் தெரசா, மதுமிதா, பிரம்மானந்தம், மற்றும் பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு அஜயனன் வின்செண்ட் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், உருது என பல மொழிகளில் ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

24 மணி நேரத்தில் 'புலி' செய்த சாதனை. பாகுபலியை வீழ்த்துமா?

நேற்று அதிகாலை 12மணிக்கு வெளியான இளையதளபதி விஜய்யின் 'புலி' படத்தின் டிரைலர், அனைவரும் எதிர்பார்த்தபடி புதிய சாதனையை நிகழ்த்திவிட்டது.....

உதயநிதி படத்தில் இணையும் அஜீத் பட நடிகை

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நாயகனாக அறிமுகமாகி அதன் பின்னர் இது கதிர்வேலன் காதல், நண்பேண்டா

அஜித் No . 1, விஜய்க்கு டாப் 10-இல் இடமில்லை

நமது அண்டை மாநிலங்களில் ஒன்றான கர்நாடக மாநிலத்தில் கூகுளில் கடந்த ஆறு மாதங்களில் அதிகம் தேடப்பட்ட திரை நட்சத்திரங்கள்...

அஜீத்துக்கு வில்லனாகிய சூர்யாவின் வில்லன்?

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் இந்த படத்தின் படப்பிடிபு நடைபெற்று வருகிறது...

இளையதளபதியின் 'புலி' டிரைலர் எப்படி இருக்கு? உங்கள் கருத்து என்ன?

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்தின் டிரைலர் இன்று அதிகாலை 12 மணிக்கு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது...