மக்களுக்கு நல்ல செய்ய கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்: விஷால்

  • IndiaGlitz, [Thursday,September 07 2017]

அறிஞர் அண்ணாதுரை, கலைஞர் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் கோலிவுட் திரையுலகினர் கையில் தான் உள்ளது. இன்னும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்பட பலருக்கு முதல்வர் நாற்காலி காத்திருப்பதாகவும் எதிர்பார்க்கபப்டுகிறது.

இந்த நிலையில் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் மாற்றம் கொண்டு வந்து புரட்சியை ஏற்படுத்திய விஷாலும் விரைவில் அரசியலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் இந்த கருத்தை அவரே ஒப்புக்கொள்ளவும் செய்கிறார்.

சமீபத்தில் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியபோது, 'இன்றைய அரசியல்வாதிகளின் பருப்பு இனி வேகாது. அரசியல்வாதிகள் அவர்கள் அவர்களே மண்ணை அள்ளி போட்டுக்கொள்கின்றனர். இதனால் அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்பு எதிர்காலத்தில் அதிகமாகும். அந்த சூழ்நிலையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த அணிலாகவோ, பாலமாகவோ கண்டிப்பா இருப்பேன்.

பவருக்கு வந்தாதான், அதிகமா மக்களுக்கு நல்லது பண்ண முடியும்னு சூழ்நிலை இருந்தா, அதுதான் அரசியல்னா நானும் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்' என்று விஷால் கூறியுள்ளார். நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் செய்த புரட்சியில் தமிழகம் முழுவதும் அவர் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

விவாதங்களை துப்பாக்கியால் வெல்ல முயற்சி செய்யலாமா? கமல்ஹாசன்

நேற்று முன் தினம் இரவு பெங்களூரில் முத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்

விஜய் ஆண்டனியின் 'காளி'யில் நடிக்கும் 4 ஹீரோயின்கள் யார் யார்?

விஜய் ஆண்டனி நடித்து வரும் 'அண்ணாதுரை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் ஒரே நாளில் வெளியானது

அனிதா குடும்பத்திற்கு தற்போது தேவை நிதியல்ல, நீதி: நடிகர் ஆனந்த்ராஜ்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் இருந்து விலகியுள்ள நடிகர் ஆனந்த்ராஜ் அவ்வப்போது ஆட்சியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டி வருகிறார்.

நீட் அடிப்படையில் மாணவர்களை சேர்க்க மறுத்த வேலூர் சி.எம்.சி

இந்த ஆண்டு மருத்துவம் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வின் அடிப்படையில் தான் சேர்க்கப்பட வேண்டும்..

பிக்பாஸ் வீட்டில் திடீரென நுழைந்த வையாபுரி மனைவி

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக ஃப்ரீஸ் டாஸ்க் ஓடிக்கொண்டிருக்கின்றது.