close
Choose your channels

கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சூர்யா-கார்த்தி பட நாயகி?

Wednesday, June 3, 2020 • தமிழ் Comments

இந்தியாவின் பளுதூக்கும் வீராங்கனையும் இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் முதல் முதலாக தங்கம் பெற்று தந்தவருமான கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருப்பதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். சமீபத்தில் அவருடைய பிறந்த நாளன்று இதுகுறித்த அறிவிப்பை கோனா பிலிம்ஸ் நிறுவனம் தனது சமூக வலைப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கர்ணம் மல்லேஸ்வரி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் அவருடைய கேரக்டரில் நடிக்க முன்னணி நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அந்த வகையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி கர்ணம் மல்லேஸ்வரி கேரக்டரில் நடிக்க ரகுல் ப்ரீத்திசிங் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது

சூர்யா நடித்த ‘என்.ஜி.கே’ மற்றும் கார்த்தி நடித்த ’தீரன் அதிகாரம் ஒன்று’, ‘தேவ்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு படங்களிலும் நடித்த ரகுல் ப்ரீதிசிங், கர்ணம் மல்லேஸ்வரி கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று படக்குழுவினர் கருதுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz