close
Choose your channels

AC யில இருந்தா கொரோனா வருமா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது தகவல்!!!

Monday, June 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

AC யில இருந்தா கொரோனா வருமா??? அதிர்ச்சியை ஏற்படுத்தும் புது தகவல்!!!

 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு விதிமுறைகள் கட்டாயப்படுத்தப் பட்டு வருகின்றன. இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு விதிமுறைகளில் பெரிய பெரிய மால்களை திறக்கக்கூடாது என விதி இருந்து வருகிறது. காரணம் மால்கள், தியேட்டர்கள் போன்றவற்றில் அடைத்து வைக்கப்பட்ட முறையில் ஏசிக்கள் (குளிர்யூட்டப்படும் கருவிகள்) போடப்படும். அப்படி ஏசிக்களைப் பயன்படுத்தும்போது வெளியே இருக்கும் காற்று உள்ளே போகாது. மேலும் ஒருவர் சுவாசித்த காற்றை மற்றவர்கள் தொடர்ந்து சுவாசிக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படும். கொரோனா வைரஸ் தொற்று காற்றின் மூலம் பரவாது என்றாலும் காற்றில் பரவும் வைரஸ் கிருமிகள் சற்று நேரம் தங்கி வாழ்வதற்கு அதிகம் சாத்தியம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த அச்சத்தால் தற்போது தியேட்டர், மால்கள் போன்ற அடைப்புள்ள இடங்கள் திறக்கப்படக் கூடாது என்ற விதிமுறை கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

இதுவரை கொரோனா நோய்த்தொற்று ஏசிக்கள் மூலம் பரவும் எனக் கூறுவதற்கான எந்த ஆதாரமும் பதிவாகவில்லை. ஏசிக்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவும் என உலகச்சுகாதார நிறுவனமும் இதுவரை எந்தத் தகவலையும் வெளியிட வில்லை. ஆனால் ஏசிப் பொருத்தப்பட்ட அறை மிகவும் ஆப்பத்தானது என சில ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன. மேலும் இந்தியாவில் மால்கள், தியேட்டர்களை திறக்கக்கூடாது என்பதற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் காற்று மீண்டும் மீண்டும் சுழன்று வருவதற்கு வாய்ப்புள்ள இடமாக இருக்கின்ற பெரிய பெரிய ஏசி அறைகளை திறக்கக்கூடாது என விதிமுறை இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் பரவலின் ஆரம்பக் கட்டத்தில் சீனாவின் குவாங்டன் நகரத்திற்கு வுஹான் நகரத்தில் இருந்து ஒரு குடும்பம் உணவருந்த வந்து விட்டு சென்ற பின்பு அந்த உணவகத்திற்கு வந்த 3 குடும்ப உறுப்பினர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத முறையிலேயே இவர்கள் நடந்து கொண்டனர் என்றாலும் எப்படி கொரோனா வந்தது என்பதைக் குறித்து அந்நாட்டின் நோய்த்தொற்று அதிகாரிகள் ஆராயத் தொடங்கினர். அதில் ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் உட்கார்ந்து 4 குடும்பங்களும் சாப்பிட்டது கண்டுபிடிக்கப் பட்டது. எனவே ஏசி பொருத்தப்பட்ட அறைகளில் காற்று வெளியே சென்று இருக்காது. அதனால் காற்றின் மூலம் பரவியருக்குமா என்ற சந்தேகத்தை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தினர். அந்த நிகழ்வைத் தொடர்ந்து பல நாடுகளிலும் ஏசி பொருத்தப்பட்ட அடைக்கப்பட்டு இருக்கும் அறைகளைப் பயன்படுத்துவது குறித்த பல கட்டாய விதிமுறைகள் வகுக்கப் பட்டு வருகின்றன.

இந்நிலையில் வீடுகளில் பொருத்தப்பட்ட ஏசிக்களின் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா என்பதைக் குறித்து சந்தேகமும் எழுப்பப் படுகிறது. மும்பை ஐஐடி நிறுவனத்தின் தொற்றுநோயியல் நிபுணர் சம்புதா சவுத்ரி, தி பிரிண்ட் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சில வழிமுறைகளை சுட்டிக் காட்டியிருக்கிறார். வீட்டில் உள்ள உறுப்பினர்கள் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு வராத வரை ஏசிக்களை தாராளமாக பயன்படுத்தலாம். அதில் வெப்பநிலை 24-30 வரையிலும் ஈரப்பதம் 40-70 வரையிலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதனால் பாதிப்பு வராது. ஆனால் சிறிதாவது காற்று வெளியே போகுமாறு ஜன்னல்களைத் திறந்து வைக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல கொரோனா அறிகுறிகளோடு வீடுகளில் யாரையாவது தனிமைப்படுத்தும்போது ஏசிக்களை பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறியுள்ளார். வீட்டில் உள்ள உறுப்பினர்களுக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் ஏசிக்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். கார் போன்ற வாகனங்களில் செல்லும்போது ஏசிக்களைப் பயன்படுத்துவது குறித்தும் சில வழிமுறைகள் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போது ஏசிக்களைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல வெளி நபர்கள் யாராவது வாகனங்களில் வந்தால் ஏசிக்களைத் தவிர்க்கலாம். மற்றபடி கார் போன்ற வாகனங்களில் ஏசிக்கள் அதிக ஆபத்தைக் கொடுக்காது எனச் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது.

- நன்றி பிபிசி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.