மாநாடு- 2  உருவாக்கப்படுமா? பதில் அளித்த இயக்குநர் வெங்கட் பிரபு!

  • IndiaGlitz, [Wednesday,December 01 2021]

இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி பல்வேறு நெருக்கடிக்கு மத்தியில் திரைக்கு வந்திருக்கும் திரைப்படம் “மாநாடு“. இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. “ஈஸ்வரன்“ திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் சிம்பு நடித்த இந்தப் படம் பெரும் வெற்றிப் பெற்றிருப்பதால் சிம்பு ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.

எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வருமென எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த 25 ஆம் தேதி திரைக்கு வந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தில் யுவனின் இசையும் பெரிதாகப் பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் “மாநாடு 2“ படத்தை எதிர்ப்பார்க்கலாமா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதையடுத்து நேற்று டிவிட்டர் ஸ்பேசஸில் உரையாடிய வெங்கட்பிரபு, “மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தெலுங்கு நடிகர் ரவி தேஜாவைத்தான் அணுகினோம். அவர் பிஸியாக இருந்ததால் எஸ்.ஜே சூர்யா நடித்தார். ஆனால் தற்போது ரவிதேஜா படத்தைப் பார்த்துவிட்டு ‘மாநாடு‘ தெலுங்கில் எடுத்தால் நான் நிச்சயம் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சிம்புவிற்கு படத்தின் இறுதியில் மீண்டும் டைம் லூப் காட்சி வருவதுபோல் வைத்திருக்கிறோம். சிம்புவுக்கு டைம் லூப் வரும்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கும் வரும். அப்போது தனுஷ்கோடியும் மீண்டும் வருவார் என உற்சாகமாகப் பதில் அளித்துள்ளார்.

வெங்கட் பிரபுவின் இந்தப் பதிலைத் தொடர்ந்து “மாநாடு 2“ திரைப்படம் உறுதியாக வரும் என்ற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு “மாநாடு 2“ படத்துக்கான கதையை இயக்குநர் வெங்கட் பிரபு தயார் செய்துவிட்டதாக மாநாடு படத்தின் எடிட்டர் பிரவீன் கே.எல். தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

More News

இயக்குநர் வசந்தின், “சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்“ படத்திற்கு நடிகர் சூர்யா பாராட்டு!

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் இசைஞானி இசையில் கடந்த 26 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில்

கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆவது எப்போது? தனியார் மருத்துவமனை தகவல்!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நேற்று டிஸ்சார்ஜ் ஆகி விட்டதாக வதந்தி கிளம்பியதை அடுத்து மக்கள் நீதி மய்யம் அதுகுறித்து விளக்கம் அளித்தது என்பது தெரிந்ததே.

என்னை இனிமேல் இப்படி கூப்பிட வேண்டாம்: அஜித்தின் வேண்டுகோள் அறிவிப்பு!

அஜித்தை தல அஜித் என்று ஒருசில ஊடகங்களும் ரசிகர்களும் தெரிவித்துவரும் நிலையில் என்னை 'தல' என்று கூப்பிட வேண்டாம் என அஜீத் வேண்டுகோள் விடுத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இன்று வெளியாகும் 'வலிமை' சிங்கிள் பாடல் குறித்த முக்கிய தகவல்!

தல அஜித் நடித்து முடித்துள்ள 'வலிமை' திரைப்படத்தில் சிங்கிள் பாடல் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

நிரூப்பை மாறி மாறி கலாய்க்கும் ராஜூ, இமான், அபிஷேக்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பிரேக்கிங் நியூஸ் என்ற டாஸ்க் நடைபெற்று வருகிறது என்பதும் இதில் இரு அணிகளாக பிரிந்து பிக்பாஸ் போட்டியாளர்களின் பழைய நிகழ்வுகளை வெளியே கொண்டுவந்து