close
Choose your channels

வேறலெவலா மாறப்போகும் டிவிட்டர் கணக்கு? கட்டணம் இருக்குமா?

Wednesday, May 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அதன் சேவையில் பல்வேறு மாற்றங்கள் வந்துவிட்டன. இந்நிலையில் டிவிட்டரில் தொலைபேசி எண் இல்லாமலேயே வீடியோ கால் மற்றும் ஆடியோ கால் சாட்டிங் வசதி கொண்டுவரப்படும் என அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கினார். அதிலிருந்து Twitter 2.0 the everything App எனும் பெயரிலான செயல்திட்டத்தை அமல்படுத்தி வருகிறார். அந்த அடிப்படையில் பல்வேறு சேவை மாற்றங்கள் இதில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொண்டாலும் சமீபத்தில் ப்ளூ டிக் விவகாரத்திற்கு எதிர்ப்புகள் வந்தன.

இந்நிலையில் தற்போது டிவிட்டரில் வீடியோ கால், ஆடியோ கால் வசதி கொண்டுவரப்படும். இதற்கு தொலைபேசி எண்ணே தேவைப்படாது என்றும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த வசதி மெட்டாவால் இயக்கப்படும் பேஸ்புக், டெலிகிராம், வாட்ஸ்அப் போன்று சிறப்பாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

டிவிட்டரில் அங்கீகரிக்கப்பட்ட கணக்குகளுக்கு சந்தா செலுத்தி ப்ளூ டிக் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியது. இதனால் பல பிரபலங்கள் தங்களது ப்ளூ டிக் அங்கீகாரத்தை இழந்தனர். இதற்கு வியாபார நோக்கில் எலான் மஸ்க் மாற்றங்களை கொண்டுவருவதாக சிலர் எதிர்மறையான விமர்சனங்களை வைத்தனர்.

இந்நிலையில் தற்போது வீடியோ கால், ஆடியோ கால் வசதியைக் கொண்டு வருவதாகக் கூறியுள்ளார். ஆனால் இதற்கும் கட்டணம் இருக்குமோ? என்று சந்தேகத்தையும் இப்போதே வாடிக்கையாளர்கள் எழுப்பி துவங்கிவிட்டனர். ஆனால் கட்டணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.